குச்சி குச்சி ராக்கம்மா

இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு பெண்கள், கையைத் தோளின்மேல் போட்டுக் கொண்டு நிற்பார்கள். ஒருபக்கத்திலுள்ள கட்சியார் கேள்வி கேட்பார்கள். மற்றொரு பக்கத்திலுள்ளவர்கள் பதிலுரைப்பார்கள்.

கேள்வி: குச்சிக் குச்சி ராக்கம்மா
பெண்ணுண்டோ?
கூடசாலி ராக்கம்மா
பெண்ணுண்டோ?
சாதி சனமெல்லாம்
பெண்ணுண்டோ?
சம்பந்த வழியெல்லாம்
பெண்ணுண்டோ?

 

பதில்: குச்சி குச்சி ராக்கம்மா
பெண்ணில்லை
கூடசாலி ராக்கம்மா
பெண்ணில்லை
சாதிசனமெல்லாம்
பெண்ணில்லை
சம்பந்த வழியெல்லாம்
பெண்ணில்லை

 

கேள்வி: குச்சி குச்சி ராக்கம்மா
நூறு ரூபாய்
கூடசாலி ராக்கம்மா
நூறு ரூபாய்
சாதிசனமெல்லாம்
நூறு ரூபாய்
சம்பந்த வழியெல்லாம்
நூறு ரூபாய்

 

பதில்: குச்சி குச்சி ராக்கம்மா
அது வேண்டாம்
கூடசாலி ராக்கம்மா
அது வேண்டாம்
சாதி சனமெல்லாம்
அது வேண்டாம்
சம்பந்த வழியெல்லாம்
அது வேண்டாம்

குறிப்பு: இப்படியே, “சாயச்சேலை”, “சரிப்பளி” என்று பலபொருள்களையும் சொல்லிப் பெண் கேட்பார்கள், எதிர்கட்சியினர் வேண்டாம், வேண்டாம் என்பார்கள்.

சேகரித்தவர்:
S.S போத்தையா

இடம்:
விளாத்திக்குளம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்.