|
சீரழிந்தேன்
அவள் சிறுவயது முதல் செல்வமாகவும் அருமை யுடனும் வளர்க்கப்பட்டவள்.
ஆனால் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதானே
!
தற்கால சமூக நியதியும் அவளது வாழ்க்கையும் மாறிவிடுகிறது. தனக்கு வாழைமரத்தையும் தென்னைமரத்தையும்
உவமையாகக் கூறுகிறாள்.
வடக்கே நெலாக் காய-ஒரு
வாழ மரம் பூச் சொரிய
வாழ கருக் கழிஞ்சே(ன்)-நான்
வா மயிலா சீரழிஞ்சேன்
தெற்கே நிலாக்காய-ஒரு
தென்னமரம் பூச்சொரிய
தென்ன கருக்கழிஞ்சேன்-நான்
தே மயிலா சீரழிஞ்சேன்
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர், தருமபுரி மாவட்டம். |
|