|
மனுவை இழந்தவள்
(கணவனை இழந்தவளின் ஒப்பாரி பாடல்)
மண்ணெக் கொளப்பி-ஒரு
மணக் கரும்பு
நாத்துமிட்டு
மனு வெல்லாம் அந்தப் புரம்
மணிக்கரும்பு
இந்தப் புரம்
சேத்தை
கலக்கி-ஒரு
செங்கரும்பை
நாத்து மிட்டு
சேனை யெல்லாம்
அந்தப் புரம்
செங்கரும்பு இந்தப் புரம்
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
சேலம் மாவட்டம். |
|