முன்னுரை
சங்க
நூல்கள் பெரும்பாலும், காதலைப் பற்றியும், அரசியலைப்
பற்றியுமே வலியுறுத்திக்
கூறுகின்றன. இவ்விரண்டைப்
பற்றிக்கூறும்
பாடல்களிலும், நூல்களிலும் அறநெறியைப்
பற்றிய செய்திகளும் ஆங்காங்கே
கலந்து காணப்படுகின்றன; நல்லொழுக்கத்தை
வலியுறுத்தும் நீதிமொழிகளும்
அமைந்திருக்கின்றன. ஆயினும் நீதிகளைப் பற்றி மட்டும்-
ஒழுக்கத்தைப்
பற்றி மட்டும் தனியாகக் கூறப்படும் சங்க நூல்கள் இல்லை.
முதன் முதலில் ஒழுக்கத்தைப் பற்றித் தனித்தனியாக எழுதப்பட்ட
நூல்கள், பதினெண்
கீழ்க்கணக்கு
நூல்களின் தொகுதியிலேதான்
காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கில்
உள்ள பதினெட்டு நூல்களிலே
நீதிநூல்கள் பதினொன்று; இது குறிப்பிடத் தக்கது.
இச்சமயத்தில் ஒரு உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. சைன-
பௌத்த மதங்கள்
தமிழ் நாட்டில்
மிகுதியாகப் பரவிய பிறகுதான்
ஒழுக்கத்தைப் பற்றித் தனியாகத் தமிழ்
நூல்கள் எழுதப்பட்டன.
சமணமும்,
பௌத்தமும், ஒழுக்க நெறியையே அடிப்படையாகக்
கொண்டவைகள்.
அவைகள் கடவுள்நெறியைப்
பற்றியோ பக்தி நெறியைப் பற்றியோ
கவலைப்படுவதில்லை; ஆதலால் அக்காலத்தில் அறநூல்கள்
பல பிறந்தன.
சமண-பௌத்த மதங்களுக்குத்
தமிழகத்திலே எதிர்ப்பு தோன்றிய
காலத்தில் பக்தி மார்க்கத்தை வலியுறுத்தும் நூல்களே
|