பக்கம் எண்: - 2 -

ஆயிரம் மக்களே அந்த மொழி பேசிவருகிறார்கள். ஆனாலும், திராவிடர்கள் வடமேற்குக் கணவாய்முதல் வங்காளம் வரையில் பழங்காலத்தில் பரவியிருந்தார்கள் என்பதற்கும், பழந்திராவிடமொழி பேசிவந்தார்கள் என்பதற்கும் இவை சான்றுகளாக உள்ளன.

வட இந்திய மொழிகள்

வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் (syntax) இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடே ஆகும்.

     வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலியவை செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிடமொழி தென்னிந்தியாவின் அளவில் குறுகிவிட்டது. காலப்போக்கில் தென்னிந்தியாவிலும் ஆட்சி வேறுபாடு, மலை ஆறுகளின் எல்லை வரையறை முதலான காரணங்களால் ஒரு பகுதியில் வாழ்ந்த திராவிட மக்கள் பேசிய மொழிக்கும், மற்றொரு பகுதியில் வாழ்ந்த திராவிடர்கள் பேசிய மொழிக்கும் இடையே வேற்றுமை வளர்ந்தது. போக்குவரத்துக் குறைந்த அந்த காலத்தில் அந்த வேற்றுமை வளர்வது எளிது. அதனால் தெற்கே இருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என வேறுபட்டது. திருப்பதி மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தெலுங்கு என வேறுபட்டது. மைசூர்ப் பகுதியார் பேசிய திராவிடமொழி கன்னடம் என வேறுபட்டது. தென்மேற்கே கேரளத்தில் இருந்தவர்களின் மொழி மலையாளம் என வேறாக வளர்ந்தது. இவை வெவ்வேறு காலங்களில் இவ்வாறு தனித்தனி மொழிகளாக வளர்ச்சி பெற்றன. இந்த நான்கு மொழிகளுக்குள், நெடுங்காலமாக இலக்கிய வளர்ச்சி பெற்று வளர்ந்த மொழி தமிழ்.

இந்த மொழிகளைக் குறிக்கும் திராவிடம் என்ற சொல் பிற்காலத்தில் ஏற்பட்டது. அது தமிழ் என்ற சொல்லின் திரிபே. தமிழ் தமிள த்ரமிள த்ரமிட திரபிட திரவிட என்று திரிந்தமைந்த சொல் அது. ஒரு காலத்தில் கன்னடத்தைக் கருநாட்டுத் தமிழ் என்றும், துளு மொழியைத் துளு நாட்டுத் தமிழ் என்றும், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என்றும் சிலர் குறிப்பிட்டது உண்டு. ஆனால் இன்று திராவிடம் என்ற சொல், அந்த மொழிகள் தனித்தனியே பிரிவதற்குமுன் இருந்த பழைய நிலையைக் குறிப்பதற்கும், இவை ஓர் இனம் என்று கூறி அந்த இனத்தைக் குறிப்பதற்கும் உரிய சொல்லாகப் பயன்படுகிறது.

தென் இந்திய மொழிகள்

இந்த நான்கு திராவிட மொழிகளுக்குள் இன்னும் தெளிவான ஒற்றுமைக்கூறுகள் உண்டு. ஏறக்குறைய ஐயாயிரம் சொற்கள் இன்னும்