5.
இரட்டைக் காப்பியங்கள்
(கி.
பி. 100 - 500)
தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியம் முதலில் இயற்றப்பட்டதாக
இல்லை. தமிழின் பழைய இலக்கியம் தனித்தனிப் பாட்டுகளாகவே உள்ளது. மூன்று அடி உள்ள
சிறு பாட்டுமுதல் 782 அடி உள்ள நீண்ட பாட்டுவரையில் உள்ள தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக
உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின் ஓசை அமைப்புகளையும் பொருள் வகைகளையும்
ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாட்டுகளே தமிழ் இலக்கியத்தின் தோற்றம் ஆகும். அக்காலத்தில்
பல கதைகள் இருந்திருக்கவேண்டும். நாடகங்கள், பல மேடைகளில் நடிக்கப்பட்டுவந்தன
என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. தொல்காப்பியத்தில் மெய்ப்பாடுகள்பற்றிக் கூறும்
பகுதியில் நாட்டியக் கலை குறிக்கப்படுகிறது. சங்கப்பாட்டுகளில் நாட்டியக் கலையில்
தேர்ந்த விறலியர், கூத்தர், பொருநர் என்பவர்கள்பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
கதை தழுவிய நாடகங்கள் பல இருந்திருக்கவேண்டும். கதைகளும் பல இருந்திருக்கக் கூடும்.
ஆனால், அந்தக் கதைகள் திரண்டு வளர்ந்து காப்பியங்களாக உருவம் கொள்ளவில்லை.
கற்றறிந்த புலவர்கள் அந்தக் கதைகளை எழுதிப் போற்ற மனம்கொள்ளாதது காரணமாக இருக்கலாம்.
ஆனால், அந்த நிலையைக் கடந்து காப்பியம் படைக்க முன்வந்தவர்
ஒருவர். அவரே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள். அவர் சேரநாட்டு அரச குடும்பத்தைச்
சேர்ந்தவர். அண்ணன் ஆட்சி பெறவேண்டும் என்ற நோக்கம் கொண்டு, குடும்பத்தில்
இருந்தால் அண்ணனுடைய அரசுரிமைக்கு இடையூறு ஆகுமோ என்று அஞ்சி அவர் துறவியானார். சேரநாட்டு
அரசைச் சார்ந்தவராக இருந்தபோதிலும், பாண்டியரையும் சோழரையும் தக்க மதிப்புடன்
குறிப்பிட்டுள்ளார். சேர நாட்டுப் பகுதிகளைப் புகழ்ந்து பாராட்டியுள்ளதுபோலவே பாண்டிய
நாட்டிலும், சோழ நாட்டிலும் உள்ள ஊர்களையும் ஆறுகளையும் ஆர்வத்தோடு போற்றியுள்ளார்.
தமிழ்நாடு மூன்று பிரிவுகளாக மூன்று அரச குடுபத்தாரின் ஆட்சிக்கு உட்பட்ட மூன்று வேறு
நாடுகளாக இருந்த காரணத்தால், ஒன்றைப் புகழ்வோர் பெரும்பாலும் மற்றொன்றைப் பாராட்டுவதில்லை.
சங்கப்பாட்டுகளில் காணப்படுவது பெரும்பாலும் இந்நிலைமையை. அதனால் மூன்று தனி நாடுகளையும்
சேர்த்துத் தமிழ்நாடு என்று நோக்கும் நோக்கத்திற்கு அந்தக் காலத்துப் |