பக்கம் எண்: - 83 -


பாண்டியனுடைய பிறந்த நாளாகிய உத்திராட நாள் இது. இன்று பாண்டியன் போர் செய்யும் வழக்கம் இல்லை” என்று சொல்லி, இன்று ஒரு நாள் தான் அவர்கள் அஞ்சாமல் வாழக்கூடிய நாள் என்று அவர்களை இகழ்ந்தும் பாண்டியனைப் புகழ்ந்தும் பாடியுள்ளார்:

           கண்ணார் கதவம் திறமின் களிறொடுதேர்
           பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர்
           தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாள்
           போர்வேந்தன் பூசல் இலன்.