தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலைத் துயிலெழுப்புவதாகவும்
பாடியுள்ளனர். பாடல்கள் இலக்கிய நயம் உடையவை. ஒரே வகையான செய்யுள் வடிவிலேயே
சான்றோர் இருவரும் பாடியுள்ளனர். பிற்காலத்தில் தத்துவராயரும் சிதம்பர சுவாமிகளும்
திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடியபோதும் அந்தச் செய்யுள் வடிவங்களை அப்படியே
பின்பற்றிப் பாடினார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசீயக்கவி பாரதியார்
பாடிய பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியிலும் அதே செய்யுள் வடிவத்தைக் கையாண்டுள்ளார்.
|
கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் |
|
கனையிருள் அகன்றது காலையம் பொழுதாய் |
|
மதுவிரிந் தொழுகின மாமலர் எல்லாம் |
|
வானவர் அரசர்கள் வந்துவந் தீண்டி |
|
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த |
|
இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் |
|
அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும் |
|
அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே. |
இது தொண்டரப்பொடியாழ்வார் பாடியது (சூரியன் கிழக்கே உதித்தல்,
இருள் நீங்கிவிடல், மலர்கள் மலர்தல், தேவர்களும் அரசர்களும் வந்து கூடி ஏவலுக்குக்
காத்திருத்தல், யானைகளும் முரசும் அதிர்ந்து கடல்போல் ஒலித்தல் ஆகியன கூறப்பட்டன.
இறுதியில் இறைவனே பள்ளியெழுக என்று வேண்டிக்கொள்ளப்பட்டது).
|
போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே |
|
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்(டு) |
|
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் |
|
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் |
|
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் |
|
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே |
|
ஏற்றுயர் கொடிஉடை யாய்எனை உடையாய் |
|
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. |
இது மாணிக்கவாசகர் பாடியது (பொழுது புலர்ந்துவிடல்,
திருவடிகளை வழிபட மலர்கள் கொண்டு அடியார் வந்திருத்தல், இறைவனுடைய புன்முறுவலை எதிர்நோக்கி
வழிபடுதல் ஆகியவை கூறப்பட்டன. இறுதியில் மகுடமாகப் பள்ளி எழுந்தருளாய் என்று வேண்டிக்
கொள்ளப்பட்டது).
தத்துவராயர்
என்னும் அத்வைத ஞானி, பதினெட்டாம் நூற்றாண்டில் திருப்பாவை, பல்லிப்பாட்டு முதலான
நாட்டுப் பாடல் வடிவங்களில் பல
|