கோவை நூல்களுள் திருக்கோவையார்க்கு அடுத்த நிலையில்
இலக்கிய உலகில் வாழ்வுபெற்றது தஞ்சைவாணன் கோவை. பொய்யாமொழிப் புலவர் (கி.
பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு) இயற்றிய அந்நூல், அதற்கு முற்பட்ட கோவை நூல்களைவிட
எளிமையும் தெளிவும் பெற்றுள்ளமை அதன் வாழ்வுக்கு ஒரு காரணம் எனலாம். மற்றொரு காரணமும்
உள்ளது. அகப்பொருள் (காதல் துறைகளின்) இலக்கண நூலாகிய நம்பியகப்பொருளுக்கு ஒவ்வொரு
துறைக்கும் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் தஞ்சைவாணன் கோவையின் பாட்டுகள் அமைந்துள்ளது
அந்தக் காரணம். அந்த இலக்கண நூலுக்கு உரிய எடுத்துக்காட்டுக்காகவே இயற்றப்பட்டதுபோல்
அவ்வளவு பொருத்தமாகவும் முறையாகவும் தஞ்சைவாணன் கோவையின் பாட்டுகள் உள்ளன. மற்றக்கோவை
நூல்கள் போலவே, கற்பனையான காதலன் காதலி ஆகியோரின் காதல் வாழ்வை ஒரு வரலாறுபோல்
கோவைப்படுத்திக் கூறுவது இது. நூலின் பாராட்டுக்கு உரிய வரலாற்றுத் தலைவனும் ஒவ்வொரு
பாட்டிலும் புகழப்படுகிறான். அவனுடைய பெயரே நூலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. தஞ்சைவாணன்
என்னும் அந்தத் தலைவன் ஒரு பாண்டிய அரசனுடைய அமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கியவன்;
அவனுடைய வீரச் செயல்களையும் கொடைப் பண்பையும் இந்நூல் பல இடங்களில் பாராட்டுகிறது.
பரணி
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ அரசன் குலோத்துங்கன்,
அனந்தவர்ம சோடகங்கன் ஆண்டுவந்த கலிங்கநாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்து
வெற்றி பெற்றான். சோழனின் படைகளுக்குத் தலைமை தாங்கி வெற்றி பெற்றுத் தந்தவன்
கருணாகரத் தொண்டைமான் என்னும் படைத்தலைவன். சோழ அரசனையும் அந்தப் படைத்தலைவனையும்
புகழ்ந்து, பாராட்டி இயற்றப்பட்ட நூல் கலிங்கத்துப் பரணி என்பது. தனியே ஒரு போர்பற்றி
எழுந்த பெருநூல் அது. வரலாற்று நிகழ்ச்சி ஒன்றைக் கருவாகக்கொண்டு இயற்றப்பட்டபோதிலும்,
புதிய கற்பனைகள் பல, நூலில் அமைந்து சுவை பயக்கின்றன. பரணி என்பது ஒரு வகை நூல்.
ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் கொன்று வெற்றியை நிலைநாட்டிய வீரன் ஒருவனைப்
புகழ்ந்து பாடுவது பரணி. தோற்ற அரசனுடைய நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர்
செய்து வெல்வதால், பரணி அங்கே பாடப்படுவதாகக் கொண்டு, தோற்ற நாட்டுப் பெயரால்
நூலை வழங்குவது மரபு ஆயிற்று. இங்கே தோற்ற நாடு கலிங்கம். ஆகவே நூல்
|