பக்கம் எண்: - 186 -

என்னும் (மணிமேகலை) அடிகளே முதல்முதலில் மடக்கு என்னும் சொல் அலங்காரமாக அமைந்து காணப்படுபவை. அதற்கு முந்தி அந்த அளவிற்குச் சொற்களின் விளையாட்டு, தமிழில் காணப்படவில்லை.

ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்களில் பலவகைச் சொல்லணிகள் இடம் பெற்றுவிட்டன. திருமங்கையாழ்வார் திருவெழுகூற்றிருக்கை என்னும் சொல்லணி அமைந்த செய்யுள் இயற்றியுள்ளார். சைவச் சான்றோர்களில் திருஞானசம்பந்தரும், நக்கீரதேவ நாயனாரும் இயற்றியிருக்கிறார்கள். அது ஒருவகைச் சித்திரகவியாகும். செய்யுளின் தொடக்க எண்முதல் இறுதி எண்முடிய ஏழு பகுதிகளாக எழுதி, அந்த ஏழு வரிசைகளையும் ஒரு தேரின் மேற்பரப்பாகக் கொண்டு, அவ்வாறே பாட்டின் இறுதி எண்முதல் தொடக்க எண் வரிசையில் ஏழு பகுதிகளையும் தேரின் அடிவரிசைகளாகக் கொண்டு தேர் என்னும் (ரதபந்தம்) சித்திரகவியாக அமைத்துக் காட்டுவது வழக்கம். திருஞானசம்பந்தர் ஏகபாதம் என்னும் மற்றொரு சித்திரகவியும் பாடியுள்ளார். ஒரே அடி நான்கு முறை மடக்கிவந்து சொற்கள் சிதைந்து நான்கு அடிகளிலும் நான்கு வேறு பொருள் தருமாறு அமைவது ஏகபாதம் எனப்படும்.

பிரம புரத்துறை பெம்மான் எம்மான்

என்னும் அடியே நான்குமுறை அமைதல் ஏகபாதம் என்னும் சொல்லலங்காரம் ஆகும். ஒரு செய்யுளை முதலிலிருந்து படித்தாலும் அல்லது இறுதி எழுத்திலிருந்து பின்னோக்கிப் படித்தாலும் அதே செய்யுளாக அமையுமாறு இயற்றுவது மாலைமாற்று என்னும் சித்திரகவி யாகும். திருஞானசம்பந்தர் இதையும் இயற்றியுள்ளார். ஒரு செய்யுளில் முன்வந்த சில சீர்களும் அடியும் அவ்வாறே மீண்டும் மடக்கிவரும் சொல்லணியாகிய மடக்குவதையும் திருஞானசம்பந்தர் ஆறு பதிகங்களில் அமைத்துள்ளார். யமகமாக நான்கு பதிகங்கள் இயற்றியுள்ளார். சக்கரமாற்று என்னும் சித்திரகவியாக இரண்டு பதிகங்கள் இயற்றியிருக்கிறார். கோமூத்திரி என்னும் சித்திரகவியாக அவர் இயற்றிய பதிகமும் ஒன்று உள்ளது. இத்தகைய சொல்லலங்காரச் செய்யுள்கள் திருஞானசம்பந்தர் காலம்முதல் வளரத் தொடங்கின. தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய அணியிலக்கண ஆசிரியர்கள் இவற்றிற்கு இலக்கணங்களும் விளக்கங்களும் எழுதினார்கள். பிறகு வந்த கலம்பகங்களிலும் புராணங்களிலும் இவ்வகையான செய்யுள்கள் பல இயற்றிச் சேர்க்கப்பட்டன. ஆயினும் சேக்கிழார் கம்பர் முதலான