செவ்வைச்சூடுவார்
என்னும் புலவர் வடமொழி பாகவதத்தைத் தழுவித் தமிழில் 5000 செய்யுள்கொண்ட நூல்
இயற்றினார். அரசகேசரி என்பவர் காளிதாசரின் இரகுவம்சத்தை மொழிபெயர்த்து 2480
செய்யுளில் பாடினார். புகழேந்திப் புலவர் பாரதத்தில் வரும் நளனுடைய கதையை அழகான
வெண்பாக்களால் பாடினார். அதிவீரராமர் என்னும் பாண்டிய அரசகுடும்பத்தைச் சார்ந்தவர்
அதே கதையை விருத்தப்பாவால் பாடினார். கூர்ம புராணத்தையும் இலிங்க புராணத்தையும்
அவர் தமிழில் ஆக்கினார். கச்சியப்ப்ப முனிவர் என்பவர் விநாயக புராணத்தை மொழிபெயர்த்துப்
பாடினார். வீர கவிராயர் அரிச்சந்திர புராணம் பாடினார். அவருடைய பாடல்களின் நடை
நல்ல ஓட்டம் உடையது. பாடல்கள் உருக்கம் உடையவை. கற்பவர் நெஞ்சினை நெகிழ்விக்க
வல்லவை. வடமலையப்பர் மச்சபுராணத்தை மொழிபெயர்த்தார்.
சைனர்களுள்
மண்டலபுருடர் என்பவர் வடமொழி சைன புராணமாகிய ஆதிபுராணத்தை தமிழில் இயற்றி ஸ்ரீபுராணம்
எனப் பெயரிட்டார். அது மணிப்பிரவாள நடையில் இயற்றப்பட்டது. கயசிந்தாமணி என்ற
சைனநூலும் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதே ஆகும். மேருமந்தர புராணம் என்னும் சைனநூல்
வாமன முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. அது இயல்பான தமிழ் நடையில் அமைந்தது.
அறநெறிச்சாரம் என்ற நீதிநூல் முன்றுறையரையனார் என்ற சைனரால் இயற்றப்பட்டது.
தல
புராணங்கள்
உமாபதி சிவம்
என்பவர் பதினான்காம் நூற்றாண்டில் கோயில் புராணம் என்னும் தலபுராணம் பாடினார்.
அதற்குப் பிறகு அதை ஒட்டி எழுந்த நூல்கள் பல. தலபுராணங்களுள் புகழ்பெற்றவை மதுரையில்
உள்ள சிவபெருமானின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கூறும் புராணங்களே. வேம்பத்தூரார்,
பெரும்பற்றப்புலியூர் நம்பி, பரஞ்சோதி என்னும் புலவர்கள் திருவிளையாடற் புராணங்கள்
இயற்றியவர்கள். பரஞ்சோதி இயற்றிய திருவிளையாடலே இன்று பெரிதும் போற்றப்பட்டு
வருகிறது. அவருடைய விருத்தப் பாக்கள் இனிமையும் தெளிவும் உடையனவான இருத்தலே அதற்குக்
காரணம் ஆகும். 3360 பாடல்கள் கொண்ட விரிவான நூல் அது. விளக்கமான வருணனைகள் பல
அந்த நூலில் உண்டு.
தருமபுர மடத்தைச்
சார்ந்த புலவர்கள் திருமழபாடி, திருவொற்றியூர் முதலான தலங்களுக்குப் புராணங்கள் பாடினார்கள்.
நிரம்ப அழகிய தேசிகர் திருப்பரங்கிரிப்புராணம், சேதுபுராணம் என்னும் தலபுராணங்களை
|