இயற்றினார். வடநாட்டுத் தலமாகிய காசிக்கும்
நூல் இயற்றியவர் அதிவீரராம பாண்டியர். காசிக் காண்டம் என்பது அந்த நூலின் பெயர்.
திருமலைநாதர் சிதம்பர புராணம் பாடினார். திருத்தணி என்னும் முருகன் தலத்தைப் புகழ்ந்து
தலபுராணம் இயற்றினார் கச்சியப்ப முனிவர். தணிகைப் புராணம் என்னும் அந்த நூல் தலபுராணங்களுள்
அழியாமல் வாழும் சிறப்புடையது ஆகும்.
திருவாரூர், திருவெண்காடு, திருவண்ணாமலை,
திருச்செங்கோடு, விரிஞ்சீபுரம், வேதாரணியம், கும்பகோணம் முதலான ஊர்கள்பற்றித்
தலபுராணங்கள் பாடப்பட்டன. புகழ் பெற்ற புலவர் சிவப்பிரகாசர் திருக்கூவப் புராணம்
பாடினார். அவரும் அவருடைய உடன்பிறந்தோர் இருவரும் சேர்ந்து பாடிய சீகாளத்திப் புராணம்
சுவையான நூல். வீரராகவ முதலியார் திருக்கழுக்குன்றப் புராணம் இயற்றினார்.
தலபுராணங்கள் அக்காலத்தில் மக்களின்
உள்ளங்களை மிகக் கவர்ந்திருந்தன. நாட்டுப் படலம், நகரப் படலம் என முதலில் அமையும்
பகுதிகள் இலக்கியச் சுவையுடன் அமைக்கப்பட்டன. புலவர்கள் இயற்கையழகுபற்றியும் நிலவளம்
முதலியனபற்றியும் உழவர் முதலானவர்களின் வாழ்க்கைவளம்பற்றியும் கண்ட கனவுகளை எல்லாம்
அந்தத் தலபுராணங்களுள் அமைத்து, அந்தந்த நாடுகளையும் ஊர்களையும் சிறப்பித்தார்கள்.
ஆகவே அந்தந்த நாட்டு மக்கள் படித்துத் தம்தம் நாடுகளையும் ஊர்களையும்பற்றிப் பெருமையும்
பற்றும் கொண்டு மகிழ்ந்தார்கள். கொடியவர்களும் அதிகாரச் செருக்கு மிகுந்தவர்களும்
துன்பமுற்று மனம் திருந்திக் கோயில்களுக்கு வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறியதாகத்
தலபுராணங்கள் கதைகள் கூறுவது வழக்கம். அந்தக் கதைகளைச் சுவையோடு படித்து மக்கள்
மகிழ்ச்சியுறுவதற்குத் தலபுராணங்கள் பயன்பட்டன. கதைகளோடு கலந்து கலையின்பத்தை
ஊட்டுவதற்கு அந்த நூல்கள் உதவின.
பதினேழாம் நூற்றாண்டில் தலபுராணங்கள்
பல இயற்றிப் புகழ்பெற்றவர் எல்லப்ப நாவலர். திருவண்ணாலை, திருவெண்காடு, திருவிரிஞ்சை,
தீர்த்தகிரி, திருச்செங்காட்டங்குடி முதலிய தலங்களுக்குப் புராணங்கள் எழுதினார்.
விரிவான வருணனைகளைச் சுவையாக அமைப்பதில் வல்லவர் அவர். பக்திச்சுவை நிரம்பிய
பாடல்களை அவற்றில் அமைத்துள்ளார். திருவண்ணாமலைபற்றி அவர் இயற்றிய திருவருணைக்கலம்பகம்,
கலம்பக நூல்களுள் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. இலக்கிய நயம் உள்ள பாடல்கள்
பல அதில் உள்ளன.
சென்னையின் பகுதியாக உள்ள திருவொற்றியூர்க்கு
ஒரு புராணம் ஞானப்பிரகாசரால் இயற்றப்பட்டது. திருவாரூர் பற்றிய புராணம் ஞானக்கூத்தர்
|