சுட்டிக்காட்டினாராம். நல்ல நடையில்
அமைந்திருந்தபோதிலும், ஆசிரியர்க்குக் காமச்சுவையில் ஈடுபாடு மிகுந்து விளங்குவதுபோல்
மற்றச் சுவைகளில் இல்லை. நூலின் சிறப்புக்கு அது குறை ஆகிறது. அவர் ஒரு நீதி நூலும் இயற்றியுள்ளார். அது வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை எனப்படும். அவ்வையாரின் ஆத்திசூடிபோல் அது ஒரு காலத்தில் போற்றிக் கற்கப்பட்டு வந்தது. நீதிகளை எளிய முறையில் நேராக
எடுத்துரைக்கும் போக்கை அதில் காணலாம். (இலக்கியம் இயற்றவல்ல புலவர்கள் நீதிநூலும்
இயற்ற விரும்புதல் அந்தக் காலத்து வழக்கமாக இருந்ததுபோல் தெரிகிறது. அதனால் தான்
குமரகுருபரர் ஒரு நீதிநூலும், சிவப்பிரகாசர் மற்றொரு நீதி நூலும் இயற்றினார்கள்). |
அவருடைய தமையனார் வரதுங்கராம பாண்டியர்
என்பவரும் புலமை நிரம்பியவரே. பிரமோத்தர காண்டம் என்னும் சைவநூலை இயற்றியவர்
அவர். பக்திப் பாடல்களாக அவர் இயற்றிய நூல் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
என்பது. உருக்கமான பக்தியுணர்ச்சியை அந்தப் பாடல்களில் காணலாம். அதனால் ஒரு குட்டித்
திருவாசகம் என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டு வந்தது. அதில் உள்ள ஒரு பாடல் வருமாறு
: |
|
சிந்தனை உனக்குத் தந்தேன் |
|
திருவருள்
எனக்குத் தந்தாய் |
|
வந்தனை உனக்குத் தந்தேன் |
|
மலரடி எனக்குத் தந்தாய் |
|
பைந்துணர் உனக்குத்
தந்தேன் |
|
பரகதி எனக்குத்
தந்தாய் |
|
கந்தனைப் பயந்த நாதா |
|
கருவையில் இருக்கும்
தேவே. |
மச்சபுராணத்தை வடமொழியிலிருந்து தழுவி எழுதியவர் வடமலைப்பிள்ளையப்பன் என்பவர். அவர்
புலவர்க்கு உதவும் செல்வராகவும் வாழ்ந்தவர். அவருடைய உதவிகள் பெற்ற
இரத்தினக்கவிராயர் என்பவர், புலவர் ஆற்றுப் |
என்னும் நூல் இயற்றினார். அதன் வாயிலாக, புலவர்களுக்கு அந்த வள்ளலின் கொடைப்பண்பை
அறிமுகப்படுத்தினார். |
காளமேகம் |
எண்ணியவுடன் அதே நேரத்தில் கவி
பாடுகிறவர்களை ஆசுகவி எனச் சொல்வது உண்டு. தமிழிலக்கியத்தில் ஆசுகவிகள் மிகுதியாகப்
பாடிப் புகழ்பெற்றவர் காளமேகப் புலவர் என்பவர். அவர் பதினைந்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். காளமேகம் எதிர்பாராமல் பெருமழை பெய்து |