பாடல்களடங்கிய நூல்களும் அவர் இயற்றினார். திருவருள்மாலை,
தேவ தோத்திர மாலை என்பவை வழிபாட்டுப் பக்திப்பாடல்கள். இவை எல்லாவற்றையும்விட
அவருக்கு அழியாப் புகழ் தேடித் தந்தவை பிரதாப முதலியார் சரித்திரம் (1876), சுகுணசுந்தரி
சரித்திரம் (1887) என்னும் இரண்டு உரைநடை நூல்களே. இரண்டும் நாவல்கள். தமிழில்
முதல்முதல் நாவல் எழுதித் தமிழிலக்கியத்தில் புதிய துறைக்குத் தொடக்கம் செய்தவர்
அவரே.
அவர் தம் காலத்துச் சைவப் புலவர்கள் பலருடன் நட்புக்
கொண்டிருந்தார். திருவாவடுதுறை மடத்துத் தலைவருடனும் நெருங்கிய அன்புடையவராக இருந்தார்.
இத்தகைய சமரச நோக்கம் உடைய அவர், இந்துக் குடும்பத்தையும் சூழ்நிலையையும் விளக்கி
நாவல் எழுதியதில் வியப்பு இல்லை.
திருமணக்காலத்தில் கலியாண மாப்பிள்ளையை மைத்துனர்
கேலி செய்வது உண்டு; அந்த கேலிப் பேச்சை அமைத்துப் பாட்டில் பாடும் வழக்கம் உண்டு.
நலுங்குப் பாட்டு என்பது அவ்வாறு வழி வழியாக வழங்கிவருகிறது. அந்த வகையான நாட்டுப்பாடல்களையும்
வேதநாயகம்பிள்ளை பாடிக்கொடுத்தார். மைத்துனர், தம் வீட்டு மருமகனை (மாப்பிள்ளையை)
எள்ளி நகையாடுவதைப் பார்ப்போம்:
மைத்துனரே இன்றுமுதல்
மகராசர் நீரே
கொத்தார் குழலிஎங்கள்
குயிலைக் கொண்டீரே
உழவுத்தொழில் செய்துஉமக்கு
உடம்பெல்லாம் சேறு;
ஊத்தை கழுவப் பற்றுமோ
ஒன்பது ஆறு
பழங்கூழ் உண்ட உமக்குப்
பாலுடன் சோறு
பயப்படா திரும் உமக்கு
ஆயுசு நூறு
தம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களைப் பல பாடல்களில் வடித்துக் கொடுத்திருக்கிறார்.
அவரைப்போல் தொழில் முதலியவற்றில் சிக்குண்டு துன்பப்ட்டவர்கள் அந்தப் பாடல்களைப்
படித்துத் தம் துயரங்களுக்கு ஒரு வெளிப்பாடு கண்டு ஆறுதல் அடைந்து வருகிறார்கள். தூய
நெறியான வாழ்க்கை வாழ்ந்தவர் ஆகையால் அந்தப் பாடல்களின் ஒவ்வொரு சொல்லும்
உண்மையை ஆற்றலோடு எடுத்துரைக்கின்றன. வேதநாயகம் பிள்ளை இருந்த தொழில், வன்பும்
துன்பும் வழக்கறிஞர்களின்
|