‘சிவகாமி சரிதம்’ என்னும் கதை வடிவாக உள்ளன. அது நாடக
நூலின் இடையே அமைந்த தனிப்பட்ட சிறு நூல் என்று கூறத்தக்கதாக உள்ளது.
நாடகத்தின் கதை வருமாறு : பாண்டிய அரசன் சீவகன் என்பவனுக்கு
மனோன்மணி மகள். தீய எண்ணமே மிகுந்த குடிலன் அமைச்சன். நல்லெண்ணம் மிகுந்த சுந்தர
முனிவர் குடும்பத்தின் குரு. பக்கத்து நாடாகிய சேரநாட்டு அரசன் புருடோத்தமனுக்கு மனோன்மணியை
மணந்துகொள்ள விருப்பம் உண்டு. சுந்தர முனிவர்க்கும் அந்தத் திருமணத்தை முடித்து வைக்கும்
நோக்கம் உண்டு. ஆனால் நாட்டின் எல்லைப் பகுதி காரணமாகப் பாண்டியனுக்கும் சேரனுக்கும்
பகை ஏற்படுகிறது; அமைச்சன் குடிலனுடைய சூழ்ச்சியால் போர் மூளுகிறது. மனோன்மணியை
தன் மகனுக்கு மணம் முடித்துப் பாண்டிய அரசைக் கைபற்றிக் கொள்ளவேண்டும் என்பது குடிலனுடைய
ஆசை. தன் நோக்கத்தை மறைத்து அரசனைத் தன் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்துவிடுகிறான்.
போரிலே வெற்றி கிடைப்பது அரிது என்ற நிலை ஏற்படும் போது, பாண்டியன் தன் மகளை
அமைச்சனுடைய மகனுக்குத் திருமணம் செய்துவைக்க உடன்படுகிறான். மனோன்மணியும் தந்தையின்
கவலை உணர்ந்து இசைகிறாள். நள்ளிரவில் திருமண ஏற்பாடு நடக்கிறது. அமைச்சனுடைய மகன்
மாலையுடன் வந்து நிற்கிறான். சேர அரசன் அந்நிலையில் குடிலனுக்கு விலங்கிட்டு அங்கே
வருகிறான். மனோன்மணி உடனே தன் காதலனாகிய சேரனுக்கு மாலையிட்டு மகிழ்கிறாள்.
மனோன்மணியின் தோழியாகிய வாணி என்பவளும் அவளுடைய
காதலனாகிய நடராசன் என்பவனும் உயர்ந்த நாடக பாத்திரங்கள். அவர்களின் வாயிலாகப்
பற்பல உண்மைகளை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
(அவர் இயற்றிய நூற்றொகை விளக்கம் என்பது அவருடைய
தத்துவத்துறைச் சொற்பொழிவுகள் கொண்டவை. தமிழ் இலக்கிய வரலாறுபற்றிய ஆராய்ச்சி
நூலும் முதல்முதலாக எழுதியவர் அவர்).
சங்கரதாஸ்
சுவாமிகள்
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத் துறையில்
தொண்டு ஆற்றிய துறவியார் சங்கரதாஸ் சுவாமிகள். நாடு முழுவதும் சென்று பலரை நடிப்புத்துறையில்
பழக்கிப் பல நாடகங்களை தாமே எழுதி நடிக்கச் செய்தார். அவரிடம் பயின்று நாடகக்கலையை
கற்று வளர்த்தவர்கள் பலர். அவர் எழுதிய நாடகங்கள் பல, புராணக் கதைகளை ஒட்டியவை;
நீதிகளைப் புகட்டுபவை; அந்தக் காலத்தில் இருந்த வழக்குப்படி செய்யுளும்
|