உரைநடையும் கலந்து அமைந்தவை. செய்யுளில் கூறிய கருத்தையே
மறுபடியும் உரைநடையில் விளககும் அக்காலப் போக்கு அவற்றில் காணப்படும். செய்யுள்
எல்லாம் புலவர்களின் இலக்கண மரபு பிறழாமல் அமைந்தவை. உரைநடைப் பகுதிகள் நீண்ட
வாக்கியங்களால் ஆகியவை. நடிகர்கள் நன்றாகக் கற்று மனப்பாடம் செய்ய வல்லவர்களாக
இருந்தால்தான், நாடக மேடையில் அந்தச் செய்யுள்களையும் உரைநடைப் பகுதிகளையும் சொல்லித்
திறம்பெற நடிக்க முடியும். இக்காலத்து நடிகர் பலரால் முடியாத பயிற்சி அது என்று சொல்லலாம்.
பிரகலாதன், சிறுத்தொண்டர் முதலான பக்தி நாடகங்களையும்,
பவளக்கொடி, லவகுசா முதலான இதிகாசக் கதை அமைந்த நாடகங்களையும் இயற்றி, நாட்டு
மக்களின் மனத்தைப் பண்படுத்தும் ஆர்வம் கொண்டவர் அவர். ஒரே இரவில் கண் விழித்து
உட்கார்ந்து அபிமன்யு என்னும் நாடகத்தை நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களுடன் எழுதி முடித்தார்
என்று கூறப்படுகிறது. அவ்வளவு வேகமாக நாடகம் எழுத வல்லவராய் அவர் விளங்கினார்.
அவர் நாற்பது நாடகங்கள் எழுதியிருந்தும், அவற்றை அச்சிட்டு வெளியிடுவதை விரும்பவில்லை.
அவர் காலத்திற்குப் பிறகே அபிமன்யு சுந்தரி, சதி சுலோசனா, சதி அனுசூயா முதலியன
சில அச்சிடப்பட்டன.
நாடகங்கள் பழைய மேடை மரபுகளை ஒட்டி இயற்றப்பட்டது
போலவே, நாடகங்களின் கதைப் பகுதிகளிலும் பழைய பண்பாடுகளும், நீதிகளும் வலியுறுத்திக்
கூறப்பட்டன. பெண்களின் கற்பு, பக்தியின் பெருமை முதலியன திரும்பத் திரும்ப நாடகங்களின்
வாயிலாக போதிக்கப்பட்டன. திருக்குறள், நாலடியார் முதலான நீதி நூல்களின் கருத்துகளையும்
தொடர்களையும் தம் நாடகங்களில் நிரம்பப் பயன்படுத்தினார்.
இலட்சுமண
பிள்ளை
இலட்சுமண பிள்ளை என்பவர் விழா நாடகம், ரவிவர்மா
என்னும் நாடகங்களை இயற்றினார். அவர் இசைத்துறையில் புலமை வாய்ந்தவர். செய்யுட்
கோவை என்பது அவர் இயற்றிய பாடல்களின் தொகுதியாகும்.
சம்பந்த
முதலியார்
பம்மல் சம்பந்த முதலியார் (1873 - 1964) ஏறக்குறைய
அரை நூற்றாண்டுக் காலம் நாடகக் கலையின் முன்னேற்றத்திற்காகப் பெருந்தொண்டு புரிந்து,
அதற்கு இருந்துவந்த இழிநிலையை மாற்றியமைத்தவர். 1891-ஆம் ஆண்டில் சென்னையில்
‘சுகுண விலாச சபா’ என்ற நாடகச் சங்கத்தை ஏற்படுத்தி, தாமே நாடகங்கள் எழுதி, பல
அறிஞர்கள் நடிக்குமாறு செய்து, ஒத்திகை முதலியன நடத்தி, தாமும் நடித்து,
|