பக்கம் எண்: - 285 -

பேச்சு மொழிகளையே கையாண்டு நாடகங்கள் சில எழுதியவர்கள் உண்டு. ஒவ்வொரு காலத்திற்குப் புதுமையாக வரவேற்கப்பட்டபோதிலும் அவை அவ்வளவாக வெற்றி பெறவில்லை எனலாம். தேவையானபோது தேவையான அளவிற்குப் பேச்சு மொழியைக் கையாண்ட நாடகங்களே வெற்றி பெற்றுள்ளன. முழுதும் இலக்கியநடையில் எழுதப்பட்ட நாடகங்களும் வெற்றி பெறவில்லை; முழுதும் பேச்சுமொழியில் அமைந்த நாடகங்களும் நீண்ட காலம் வாழ்வதில்லை.