பல எழுதியவர்
சோம. லெ. அவர் உலகநாடுகளைப்பற்றி மிகுதியாக நூல்கள் எழுதியவர் ஆவார். சென்னை
மாநகரின் வரலாற்றையும் அமைப்பையும் ஆராய்ந்து தெளிவான முறையில் நூல் தந்தவர் மா.
சு. சம்பந்தன்.
பயண
நூல்கள் பல உள்ளன. அவற்றில் சில இலக்கியத்தரம் பெற்றிருக்கின்றன. அ. மு. பரமசிவானந்தம்,
சி. சுப்பிரமணியம், நெ. து. சுந்தரவடிவேலர், மணியன் ஆகியோர் தாம் பயணம் செய்த
நாடுகளில் பெற்ற அனுபவங்களைச் சுவையாகத் தந்துள்ளனர். சோமுவின் ‘அக்கரைச்
சீமையிலே’ என்னும் நூல் சிறந்த படைப்பாகும். ஏ. கே. செட்டியாரின் ‘உலகம்
சுற்றிய தமிழன்’ என்னும் நூலும், சோம. லெ. எழுதிய பலநாட்டு நூல்களும் சுவையாக
அமைந்தவை.
கடிதம்
எழுதும் வடிவில் பல அருமையான கருத்துகளை விளக்கி நூல்களாகத் தரும் எழுத்தாளர்களும்
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளனர். அறிஞர் அண்ணா, மு. வரதராசன்
முதலானவர்களின் நூல்கள் இவ்வகையில் மக்களிடையே நன்கு பரவியவை. அறிஞர் அண்ணாதுரை
தமிழ்நாட்டின் பழம்பெருமைகளையும் இன்றைய அரசியல் சிக்கல்களையும் கடித நூல்களாகத்
தந்துள்ளார். அவருடைய நடை விறுவிறுப்பும் ஆற்றலும் வாய்ந்தது; உள்ளத்தின் ஆர்வத்தைப்
புலப்படுத்துவது.
வாழ்க்கை
வரலாறு
‘வாழ்க்கை
வரலாறு’ நல்ல இலக்கிய வகையாக அமைந்து வருகிறது. சென்ற நூற்றாண்டிலேயே ‘விநோதரசமஞ்சரி’
என்னும் தொகுப்பில் புலவர் சிலருடைய வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டன. அவற்றில்
வரலாற்றுடன் உண்மையற்ற கற்பனைகளும் சேர்ந்தமையால் சுவையாக அமைந்தன. அவ்வாறு கற்பனை
கலக்காமலே வாழ்க்கை வரலாற்றைச் சுவையுற அமைப்பது ஒரு கலையாகும். பாரதியாரின் வரலாற்றை
வ. ரா. சுவையாகத் தந்துள்ளார். தம் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரலாற்றை
டாக்டர் சாமிநாதய்யர் நல்ல இலக்கியமாக்கியுள்ளார். அவர் காலத்துத் தமிழ்ப்புலவர்
பலருடைய வாழ்க்கைக் குறிப்புகள் அதில் கிடைக்கின்றன. அவர் வேறு சிலருடைய வரலாற்றையும்
எழுதியுள்ளார். அரசியல் துறையிலும் கலைத்துறையிலும் இலக்கியத்துறையிலும் புகழ்பெற்ற
அறிஞர்களின் வரலாறுகள் பல வெளியாகியுள்ளன. சாமிநாத சர்மா முதலானவர்கள் இவ்வகையில்
நல்ல நூல்கள் படைத்துத் தந்திருக்கிறார்கள். டால்ஸ்டாய், லெனின், பெர்னாட் ஷா
முதலான பிறநாட்டு அறிஞர் சிலருடைய வரலாறுகளும் எழுதப்பட்டுள்ளன. மறை. திருநாவுக்கரசு,
கி. சந்திரசேகரன் ஆகியோர் தம் தந்தையரைப்பற்றி வாழ்க்கை வரலாற்று
|