V

இது மட்டுமல்லாமல் பாவேந்தர் மறைவிற்குப் பின் பாவேந்தர்
குடும்பத்துக்கு - அமைதியாகச்    சற்றேனும் வளமாக வாழ உதவி
செய்தவர் வ. சுப்பையா         அவர்கள்.பாவேந்தர் மனைவியார்
ஓய்வூதியம் பெறவும் மன்னர் மன்னன்  அனைத்திந்திய வானொலி
நிலையத்தில்      வேலைபெறவும்  உதவி   செய்தவர். பாவேந்தர்
பாரதிதாசனைப்  பெரும்பெயர்க்     கவிஞராக - தமிழுக்கும் தமிழ்
மக்களுக்கும்  அரும்பெரும்   தொண்டு   செய்தவராகக்   கண்டு
மனிதநேயத்துடன்  அகழ்வாரைத்  தாங்கும்         நிலம்போலக்
கடனாற்றியவர்     வ. சுப்பையா       அவர்கள்        என்பது
பெருமிதத்துக்குரியது.

வெளியிடப் பெறும் தலையங்கக் கட்டுரைக் கருத்துக்கள் பல
விவாதத்துக்குரியவைஎன்றாலும், சில - குறிப்பாக திராவிட நாட்டுப்
பிரிவினை, பிரெஞ்சிந்தியா இந்திய  யூனியனுடன்    சேராதிருத்தல்
என்பன காலத்தால்  நிராகரிக்கப்பட்ட     போதிலும்   பாவேந்தர்
பாரதிதாசனின்       உள்ளக்கிடக்கையை, துணிச்சலை   எடுத்துக்
காட்டுகின்றன.

வரலாற்று ஆவணங்கள்    என்பதோடு பாவேந்தரின் தமிழும்
தமிழ்ப்பற்றும் நின்று       நிலவி வழிகாட்ட வல்லன என்று கருதி
இத்தொகுதியை தமிழ் மக்களுக்கு வழங்குகிறோம்.

                                          - பதிப்பகத்தார்