தலைப்பைச் சூட்டி, இந்நூலைப் பதிப்பித்துள்ளார் இவரது அரியமுயற்சி பாராட்டுவதற்கும்
போற்றுவதற்கும் உரியதாகும்.
இனி, இத்தொகுப்புக்குள் புகுமுன் சில தகவல்களைத் தர
வேண்டியுள்ளது.இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பிரஞ்சிந்தியப்
பகுதியாக இருந்த புதுவையில் 1891 இல் கனக சுப்புரத்தினம்
( பாரதிதாசன் ) பிறந்தவர். பிரஞ்சு நாட்டினர் உலகிற்கு வழங்கிய
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மூல முழக்கத்தை
இளமை முதலே கேட்டு உணர்ச்சியும் கிளர்ச்சியும் பெற்றுப் பண்பட்டவர்.
இவர் அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த தமிழாசிரியர்களிடம்
முறையாகத் தமிழ் பயின்றவர். பாரதியார் புதுவைக்கு வருமுன்னரே
செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்தவர். பாரதியார், அரவிந்தர்,
வ.வே.சு.ஐயர் போன்றோரின் தொடர்பு இவரது அறிவைக்
கூர்மையாக்கியது. இயற்கையலேயே துணிவு மிக்க இவரை மேலும்
தீவிரமாக்கியது! அரசியலில் உரிமை வேட்கை மிகுந்த தீவிரவாதியாகவும்,
சமூக முன்னேற்றத்தில் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் காண
விழைபவராகவும் மூடத்தனங்களை முறியடிக்கக்கூடிய தீரராகவும்,
ஆபத்துக்கஞ்சாது செயலாற்றும் வீராகவும் திகழச் செய்தது. அவரது
அடலேறு போன்ற தோற்றமும், ஏற்றமிகு உணர்வும், அவரை எல்லா
வகையிலும் முன்னணியில் நிற்கச் செய்துவிட்டன!
பாவேந்தர் தமிழாசிரியராகப் பிரஞ்சு இந்தியாவின் பல்வேறு
பகுதிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். விடுதலை ஆர்வத்தால் பிரஞ்சு அரசுக்கு எதிராகச் செயலாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு,
ஒன்றேகால் ஆண்டு சிறையிலிருந்து, குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டவர் . இவர் இந்திய விடுதலைப் போரிலும் பங்கேற்றவர்,
விடுதலை வீரர்களுக்குப் பல்லாற்றானும் உதவி புரிந்தவர். தன்மான இயக்கத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் . சமத்துவப்
பாடல்களையும், பொதுவுடைமை கருத்து நிரம்பிய பாடல்களையும்
நிறைய பாடியுள்ளவர். இந்தியாவில் கருத்தடைக்கு ஆதரவாக முதன்
முதலில் பாடல்களை இயற்றியுள்ள முதற்கவிஞர் இவரே ஆவர்.
தொடக்கத்தில் ‘சுதேசமித்திரன்’, ‘குடியரசு’, ‘பகுத்தறிவு’, ‘தமிழரசு’
போன்ற இதழ்களில் எழுதி வந்தார்.
1922 இல் கே.எஸ்.பாரதிதாசன் என்னும் புனைபெயரில்
‘ தேச சேவகன் ’ எனும் இதழிலே முதன் முதலாக எழுத
முற்பட்டார்.‘புதுவை முரசு’ (1930) ‘முல்லை’ (1946). ‘குயில்’ (1947)
போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பாரதிதாசன் இருந்துள்ளார்.
இந்தியாவின் முதல் கவிதை இதழான
|