VIII

ஸ்ரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்” (1935) எனும் இதழுக்கும்
ஆசிரியராக இருந்து நடத்தியவர்.1930 இல் இவர் எழுதிய “சிறுவர்
சிறுமியர் தேசிய கீதம் ” , “ தொண்டர் நடை பாட்டு ”,   “ கதர்
இராட்டினப் பாட்டு”,தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு,‘ சஞ்சீவி
பர்வதத்தின்  சாரல் ’   எனும்      நூல்களில் முதற்  பதிப்புகள்
வெளியாகியுள்ளன.

பாவேந்தர்   பாரதிதாசனாரது   முதல் கவிதைத் தொகுதியை
1938இல் கடலூரில்   திருமதி. குஞ்சிதம் குருசாமி - நாராயணசாமி
நாயுடு அவர்களின் பொருளுதவியுடன் வெளியிட்டுள்ளார்.1955 இல்
பாரதிதாசனார் புதுவைச்  சட்டமன்றத்  தேர்தலில்   வேட்பாளராக
நின்று  வெற்றி           பெற்றார்.அதன் அவைத் தலைவராகவும்
பொறுப்பேற்றார்.   29.07.1946 இல்       சென்னையில்   நாவலர்
சோமசுந்தரபாரதியார் தலைமையில்  அனைத்துக்     கட்சியினரும்
பங்கேற்று,அறிஞர் அண்ணாவால் முன்னின்று   திரட்டி  தரப்பட்ட
ரூ.25,000 தொகை நிதியாக அளிக்கப்பட்டுப்   பாராட்டப் பெற்றார்.
1959 இல் இவர்  திருக்குறளுக்கு “ வள்ளுவர் உள்ளம் ”    என்ற
உரை விளக்கம்   கண்டுள்ளார்.          1962 இல் சென்னையில்
அனைத்துலகக்     கவிஞர்   மன்றத்தை  இவர்  தோற்றுவித்தார்.
1963 இல்   இவரது  72   ஆம்    ஆண்டுப்  பிறந்த     விழாக்
கொண்டாடப்பட்டது.

இவர்  பல திரைப்படங்களுக்கு  உரையாடலும், பாடல்களும்
எழுதியுள்ளார்.  பல  நாடகங்களையும்  படைத்துள்ளார்.அவற்றுள்
“ இரணியன் அல்லது இணையற்ற வீரன் ” எனும்        நாடகம்
குறிப்பிட்டுச்  சொல்லத்ததக்கதாகும். இவரது “ பாண்டியன் பரிசு ”
எனும் காவியத்தைத் திரைப்படமாக்க   வேண்டி சென்னை  வந்து
தங்கி, மிகுந்த முயற்சி எடுத்துச் சிரமப்பட்டு     உடல்நலம் குன்றி,
சென்னை     பொது மருத்துவ மனையில் 21.4.1964 இல் இயற்கை
எய்தினார். இவரது      இலக்கியப் பணியைப் பாராட்டி சென்னை
எழுத்தாளர் சங்கம் இவருக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
சாகித்திய அகாதெமி இவரது நூலுக்கு பரிசு வழங்கிப்    பெருமை
செய்தது.இரண்டாவது  உலகத்தமிழ்    மாநாட்டின்        போது,
சென்னையில் அறிஞர்     அண்ணா தலைமையில் இவருக்கு முழு
உருவச்சிலை  நிறுவப்பட்டது.புதுவையிலும் இவரது   உருவச்சிலை
எழுப்பப்பட்டுள்ளது. இவர் பாக்களைப் பின்பற்றி      பாரதிதாசன்
பரம்பரை’ என்ற கவிஞர் பட்டாளம் நாள்தோறும் பெருகி வருகிறது.

1947 இல்   “குயில்” இதழ், புதுக்கோட்டையிலிருந்து முதலில்
மாத     இதழாகத் தொடங்கப்பட்டது. அடுத்து “குயில்” நாளேடாக
13.9.1948 முதல்   புதுச்சேரியிலிருந்து   12.10.48 வரை நடைபெற்று
வந்துள்ளது. “குயில்”- கிழமை இதழ் 1-6-1958 முதல் 2.6.1959 வரை
முதல் ஆண்டில் மொத்தம்