52 குரல்கள்           வெளிவந்துள்ளன.  இரண்டாம்  ஆண்டில் 
வெளிவந்துள்ளவை   39 குரலே. மூன்றாவது  தொகுப்பான திங்கள் 
இருமுறை  இதழ்கள்-8.மொத்தத்தில் 8 துணைத்    தலையங்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
முதல் தொகுப்பில்  ‘ குயில் ’ -  நாளேட்டில்       13-9-48 
தலையங்கத்தில் ‘குயில்’ இதற்கு முன் ஓராண்டாக வெளிவந்துள்ளது 
என்றும்,அது இனி      சிறிய அளவில் நாளேடாக வெளியிடப்படும் என்றும்     தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியக்      கூட்டாட்சியில் 
உடனடியாகப் பிரஞ்சு இந்தியா சேர்க்கப்படக் கூடாது என்றும், அது 
தன் முழு     விடுதலைக்குரிய இடையூறுகளைக் களைந்து கொள்ள 
வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்திய யூனியன்’ எல்லா 
வகையிலும்   பிற்போக்கான  நிலையல்       இருக்கிறது.  இந்தப் 
பத்திரிகைக்காரர்கள்           ஆயிரம் சொல்லட்டும் ! அவைகள் 
 குழந்தைகளின் அழுகைகள் ............. 
நமக்குண்டு      பொறுப்பு, இவர்களைக் காப்பாற்ற வேண்டும் 
	என்பதில்      பாரதியாரைக்      காப்பாற்றியது போல் அரவிந்தர் 
	முதலியவர்களைக்   காப்பாற்றியது    போல், அடைக்கலம் தருவது 
 மட்டுமல்ல, இந்திய யூனியனுக்குப் படையுதவி தருவதன் மூலமாகவும் பிரஞ்சிந்தியா என    ஒன்றிருக்கட்டும் - பிரஞ்சிந்தியாவையும் நல்ல 
 நிலையில் - காமராஜ்களை    எதிர்காலத்தில் காப்பாற்றும் வகையில் வைத்திருப்போம்  ! எதிர்  காலத்தில்  சில  ஆண்டுகட்கு - ஆண்டு 
 ஒன்றுக்குப் பிரஞ்சு சர்க்கார் - பிரஞ்சு இந்தியாவுக்கு இரண்டு கோடி 
 ரூபாய் - கொடுத்து   வரவேண்டிய நிலைமையையும் நாங்களும் நம் 
 காலத்தின்    பொறுப்புள்ள ஒரு பிரெஞ்சு கவர்னருமாகச்  சேர்ந்து 
 ஏற்பாடு        செய்துள்ளோம் என்ற நற்செய்தியை மகிழ்ச்சியுடன் 
 மக்கட்குத் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
குயில் நாளேடு, புதுவை 14.9.1948, பக் - 2. 
“............  நடக்க    இருக்கும் முனிசிபல்   தேர்தலில்,இந்திய 
	யூனியன்தலையிட்டுக் கொள்வதில்லை    என்ற கருத்தில் டில்லியும் 
	பாரிசும் முடிவு கட்டியிருப்பதாகக் ‘குயில்’ கூறுகிறது. 
மேலும், மக்கள் ஆதரவற்றவர்கள்,பதவி ஆசை பிடித்தவர்கள் 
பரப்பும்பொய்ச் செய்திகளை பிரஞ்சிந்திய மக்கள் நம்ப மாட்டார்கள் 
என்பது  நமக்குத்   தெரியும்.வரும்  முனிசிபல்   தேர்தலில் வெளி 
 ஆட்கள் நுழையமாட்டார்கள் என்று ‘குயில்’ தெரிவிக்கிறது. 
“பிரஞ்சிந்தியாவிலுள்ள  பள்ளிகளில்         மாணவர்கட்குச் 
சம்பளமில்லை      இந்தியாவில் சம்பளம் வாங்காத பள்ளிக்கூடமே 
இல்லை ! பிரஞ்சிந்தியாவில்  பிரஞ்சக்காரர்  எல்லா உரிமைகளையும் 
 அளித்தார்கள். எல்லோருக்கும்    வாக்குரிமை உண்டு. இந்தியாவில் 
 முன்பு பணக்காரர்களுக்கு மட்டுமே 
 
 |