X

வாக்குரிமை   தரப்பட்டிருந்தது.   வெள்ளைக்காரரைத்தான்  தெய்புய்த்தே
சேனாந்தேராக     எடுக்க      வேண்டும்  என்ற  வழக்கத்தை     நாம்
உடைத்தெறிந்து .  நம்மவர்களையே     தேர்ந்தெடுக்கவில்லையா ? இங்கு
அதிகாரமுள்ள கவர்னரையே      நினைத்தால் மாற்ற நமக்கு   அதிகாரம்
இருக்கிறதே  !     பிரஞ்சிந்தியா    ஏற்பட்ட இருநூறு ஆண்டுகளில் நாம்
மாற்றிய கவர்னர்களும் இருநூற்றுக்கு மேல் இருக்குமே!    எட்டு நாட்களில்
ஒருவரை    மாற்றியிருக்கிறோம்.ஆகையால்  முழு உரிமை நமக்கு இங்கே
இருக்கிறது . விரைவில் நீங்கள்    உரிமையடைந்த பின்,       சட்டங்கள்
நல்லபடி அமைக்கப்பட்ட    பின் இதோ  நாங்களும்   இந்திய யூனியனில்
சேர்ந்து கொள்ள ஆவன    செய்கிறோம்” என்று   ‘ குயில் ’  21-9-1948
இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள  பொதுமக்கள் இது (பிரஞ்சிந்தியா)    இந்திய யூனியனில்
சேர்ந்து    விட்டால்,உடனே  புதுவை   காரைக்கால்     முதலியவைகள்
கேவலம்   ஒரு தாலுக்கா அல்லது  ஒரு    பிர்க்காவாகிவிடுமே   என்று
நினைத்துத்தான், உடனடியாக இந்திய      யூனியனில்  சேர மறுத்தார்கள்
என்றும், பிரஞ்சிந்தியர்களுக்குத் தேசபக்தி இந்தியர்களுக்கு  இருப்பதைவிட
எந்தவகையிலும் குறைவானது அல்ல    என்றும் வங்காளப்   பிரிவினைக்
காலத்தில், திலகர் காலத்தில்,    கப்பலோட்டிய   சிதம்பரனால்  காலத்தில்,
பிரஞ்சிந்தியன்ஒவ்வொருவனும் தன்நாட்டின் கடமையைச்  செய்திருக்கிறான்.
அஞ்சாதுசெய்தான்      -  பொருளால்,    உடலால், உயிரால்!   அங்கே
பிரிட்டிஷ்காரனிடத்திலிருந்து          தன்னைக்காத்துக்   கொண்ட ‘கை’
ஒவ்வொன்றும்   பிரஞ்சிந்தியன்ரகசிய முறையில் அனுப்பிய  ‘இரும்புக்கை’
யல்லவா? என்று ‘குயில்’     கேட்டுள்ளது!   பிரஞ்சிந்தியாவில்   நிலவிய
உரிமைகளையும் பெருமைகளையும்       எடுத்துக்கூறும் ‘குயில்’   தனது
தலையங்கங்களையும்  பெருமைகளையும்  எடுத்துக்கூறும் ‘குயில்   தனது
தலையங்கங்களில்அங்குக் காணப்பட்ட   கொடுமைகளையும்   தெரிவிக்கத்
தயங்கவில்லை !

“குயில்” பாட்டும் உரைநடையுமாக   வெளிவந்தது. தமிழின் அருமை
பெருமைகளைக்கூறி, தமிழ் மேல் பகைவர்  வீசிய, வீசுகின்ற குப்பைகட்குப்
புயலாகவும்இருந்தது !அது தமிழறம்  தமிழொழுக்கும் முதலியன இன்னவை
யென்றும் சாதி என்ற அழுக்கற்றவர்   தமிழர்என்றும், பாடியது.   எல்லாம்
உடையவர் தமிழராக இருந்தும் அவரிடத்தில் இல்லாதது ஒற்றுமை உணர்ச்சி
ஒன்றே என்றும், தமிழரின் நல்வாழ்வு, தமிழ்நாடு  விடுதலை பெறுவதில்தான்
இருக்கிறது என்ற உண்மையைத்  தமிழர்       உணரச் செய்யப்  பெரிதும்
பாடுபட்டது.  ‘குயில்’ அரசியல் சோலையில்  புகுந்து கூவியது.  மக்களியல்
மாந்தளிர் உண்டது. பொருளியல் பண்பாடியது.