“ஒரு நாட்டின் வேரிற் பிணைந்துள்ள பண்பாடுகளினின்று
அந்நாட்டினின்று ஒருவன் பிரிந்து வாழமுடியாது” தமிழர் ஒரு தாயின்
மக்கள் ’ அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழர் ஒருவரால்
தோற்றுவிக்கப்பட்டும், அது தமிழ்ப் பல்கலைக்கழகமாக விளங்காமல்
பைந்தமிழ் ஒழிக்கும் பாழுங்கிணறாகிறதே என்று ‘குயில்’
ஏக்கத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது. படிக்கவிருப்பந்தான் பள்ளியில் வகுப்பில்லையே ! ’ என்று வேதனைப் பட்டுள்ளது. “ இன்று கோடிக்கணக்காக உள்ள தமிழ் மாணவர்களின் நிலை என்ன? கண்ணீருடன் கம்பலையுமாகத் திரிகின்றார்களே வகுப்பு வாங்கித்தரும்படி ! அவர்கட்கு வசதிசெய்து தரும்
வேலைதான் அரசினர்க்கும் ஆளவந்தார்க்கும் முதல் வேலை” என்று அழுத்திக் கூறியுள்ளது . அது கொடுக்கும் தலைப்பே வியப்பாக இருக்கும்
‘புதுவைச் சட்ட சபைக்குத் திருவாசகம் பாடியாயிற்று!, ‘ அதாவது புதுவை சட்டமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது’, “ ஓர் இனத்தாரின் இலக்கியத்தில் அமைந்துள்ளது ” அவ்வினத்தாரின் பழம்புகழ்,ஓர் இனத்தாரின் பழம்புகழில் அமைந்துள்ளது. அவ்வினத்தாரின் எதிர்கால எழுச்சி .
“.......... 1. அரசினர் எந்தெந்த வழியாக நம் பகைக் கூட்டத்திற்கு, பகை எழுத்தாளர்க்கு, பகை ஏடுகட்குப் பணம் அனுப்புகிறார்கள்? கண்டறியஒரு தனித் துப்பறியும் படை வேண்டும். 2. எந்தெந்த
ஏட்டில், எந்தெந்தப் பொதுக் கூட்டத்தில் எந்தெந்த நாளில் தமிழைத் தமிழிலக்கியத்தைத் தமிழ் வரலாற்றைக் குறைவு படுத்துகிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் பொய்மையை எடுத்துக்காட்டி மக்களைத் தட்டி கொடுக்கஒரு புலவர் படை வேண்டும். 3. நம் மேன்மையை, தமிழின் உயர்வை, தமிழினத்தின் தொன்மையை எந்தெந்த நூலில் எந்தெந்த வரிகள் குறைவுபடுத்துகின்றன? அவைகளைமறுத்து மக்கட்கு மெய்ம்மையை எடுத்துக்காட்ட ஓர் எழுத்தாளர்படை வேண்டும். 4. எந்தெந்தப் பள்ளியில் எந்தெந்த வகுப்பில்எந்தெந்த ஆசிரியர்கள் தமிழையும் தமிழரையும் குறைவுபடுத்திப் பேசுகின்றார்கள்? அவ்வப்போது அதைத் தெரிந்து பூக்காமல் காய்க்காமல் வேரொடு தொலைக்க, பள்ளிதோறும் உள்ளவர்களைக் கொண்டஒரு மாணவப்படை வேண்டும். 5. தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களை அயலானிடம் விற்கும் ஆட்களை மக்கள் அரங்கில் இழுத்து வைக்க, அஞ்சாநெஞ்சம் படைத்த பேச்சாளர்படை ஒன்று தனியாக வேண்டும். மேற்சொன்ன ஒவ்வொருதிட்டத்திற்கும் தனித்தனி வார ஏடு வேண்டும்.சுவடி வெளியீடுகள் வேண்டும். இவை ‘தமிழர் எழுச்சி’ கொள்ள பாரதிதாசன் ‘குயில்’18.11.58 இல் தரும் திட்டங்கள் ஆகும்.
|