XXI

முனைவர் இ. அண்ணாமலை

இயக்குநர், நடுவணரசு இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனம்.
மைசூர்.

திருமுன் - படைத்தல்

அருப்புக்  கோட்டையிலே    பிறந்து     அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்திலேபயின்று   அமெரிக்காவிலே தமிழ் மொழியைக் கற்பித்தவர்.

தேமதுரத் தமிழோசையை     உலகெங்கும்  பரப்பி பாரதியின் கனவை நனவாக்கியவர்.

மொழியியலையும் திறனாய்வையும்       இரு துடுப்புகளாகக் கொண்டு
இலக்கியத் தோணியை ஆய்வுக்கடலில் செலுத்துபவர்.

ஆய்வாளர்களின் தாகத்தைத் தணிக்கும் அருஞ்சுவை நீருற்று.

தற்காலத் தமிழ் அகராதியைத் தந்து    தமிழன்னையை மகிழச் செய்த
தவப்புதல்வர்.

புளிய மரத்தின் நிழலில்   புல் பூண்டு கூடச் சரியாக வளரா. அப்படிப்
புளியமரத்திற்கு  நிகராகத்       தமிழ்ப் பேராசரியர் பலர் விளங்கும் போது
இவர் பலரை ஈன்றெடுக்கும்வாழையாகத் திகழ்கிறார்.

வாடியபோது பெய்த     நன்மழையாகவும், துயருற்ற போது தோன்றிய
நம்பிக்கை    விண்மீனாகவும்,திசை தெரியாமல் திகைத்தபோது     ஒளிவீசி
வழிகாட்டிடும்கலங்கரை விளக்கமாகவும்  அல்லலுற்ற போது ஆறுதல் கூறும்
அன்னையாகவும்அமைந்தவர்.

ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியுடனும் அடக்கத்துடனும்
தமிழ்ப்பணி   புரியும்    பேரறிஞர் பெருந்தகை   என் ஆசான் பேராசிரியர்
முனைவர் இ.அண்ணாமலை அவர்களின்      திருவடிக்கு இந்நூல் திருமுன்
படைக்கப்படுகிறது.