நாட்டுணர்வும் என் குருதியில் இரண்டறக் கலந்து இழையோடுவதால், பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் தமிழன் என்ற ஒரே தகுதியுடன் மனஉறுதியோடு செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், தென்றல், தென்மொழி, முதன்மொழி, தமிழம், குயில், முல்லை, மீட்போலை மற்றும் பல்வேறு இதழ்களிலும் மலர்களிலும் எழுதிய அரிய கட்டுரைகள் ஒருங்கே தொகுத்து முதன்முதலாக வெளியிட்டுள்ளேன். இவைகள் இதுவரை நூல்வடிவம் பெறாதவை. அரிய வரலாற்றுச் செய்திகளும், மொழிநூல் நுண்மையும், பண்பாட்டுப் பெருமையும், நாகரிகச் சிறப்பும் அடங்கிய தொகுப்புகளாகும்.

தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் தமிழர்கள் இதுவரை கண்டிராத அளவில் தமிழறிஞர் ஒருவரின் அனைத்துப் படைப்புகளும் தமிழ்மண் பதிப்பகத்தின் வழியாக ஒரே நேரத்தில் வெளிவருவது குறிக்கத்தக்கதாகும். தமிழர்தம் இல்லந்தோறும் இருக்கவேண்டிய ஒப்பற்ற வரலாற்றுக் கருவூலமான மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் கட்டுரைகளை நூல் வடிவில் தமிழர்களின் கைகளில் தவழவிடுகிறேன். வருங்காலத் தலைமுறை படித்துப் பயன்பெறுக.

வெல்க தமிழ்!

கோ.இளவழகன்
பதிப்பாளர்