உண்மையிலேயே ஆன்மிகம் ஆனவைகளாக இருப்பின், இதில்
தற்புகழ்ச்சி என்பதற்கே எந்த விதமான இடமும் இல்லை. அவை என்னுடைய அடக்கத்தையே அதிகமாக்கும். இதுவரை
செய்திருப்பவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க,அவற்றைக் குறித்துச்
சிந்திக்கச் சிந்திக்க,என் குறைபாடுகளையே நான் தெளிவாக
உணருகிறேன்.
நான் விரும்புவதும்,இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறியவேண்டும்
என்பதற்கும்,கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்;
நடமாடுகிறேன். நான் இருப்பதும் அதற்காகவேதான். நான் பேசுவன, எழுதுவன, ராஜீயத் துறையில் முயற்சி செய்வன ஆகிய யாவும் இக்குறிக்கோளைக் கொண்டவையே.ஆனால், ஒருவருக்குச்
சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும் என்பதை நெடுகிலும்
நம்பி வந்திருக்கிறேனாகையால், என்னுடைய சோதனைகளை ஒளிவுமறைவாகச் செய்யாமல் பகிரங்கமாகவே செய்து வந்திருக்கிறேன்.
இதனால், அவற்றின் ஆன்மிக மதிப்பு எந்த வகையிலும்
குறைந்துவிட்டதாக நான் கருதவில்லை. தனக்கும்,தன்னைப் படைத்த
கடவுளுக்கும் மாத்திரமே தெரிந்தவையாக உள்ள சில விஷயங்கள்
உண்டு. அவற்றை ஒருவர் மற்றொருவருக்கு விண்டு சொல்லுவது
என்பது சாத்தியமில்லாத காரியம்.நான் சொல்லப்போகும் சோதனைகள்
அப்படிப்பட்டவை அல்ல. ஆனால், அவை ஆன்மீகமானவை;
அதைவிடச் சன்மார்க்கமானவை என்றே சொல்லிவிடலாம். ஏனெனில், சன்மார்க்கமே மதத்தின் சாரம்.
வயது முதிர்ந்தவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் புரிந்து கொள்ளக்கூடிய மத விஷயங்கள் மாத்திரமே இக்கதையில்
சேர்க்கப்படும். பாரபட்சமற்ற வகையில், அடக்க உணர்ச்சியோடு அவற்றை நான் விவரிப்பேனாயின். இத்தகைய சோதனைகளில் ஈடுபட்டிருக்கும் மற்றும் பலரும் தங்கள் முன்னேற்றத்திற்கு வேண்டிய
ஆதாரங்களை இதில் காண்பார்கள். இச் சோதனைகள், குறைகளே இன்றிப் பூரணமானவை என்று நான் சொல்லிக்கொள்ளுவதாக யாரும் கருதிவிட வேண்டாம். ஒரு விஞ்ஞானி, தம் ஆராய்ச்சிகளை
எவ்வளவோ கணக்காகவும் முன் யோசனையின் பேரிலும்,நுட்பமாகவும் நடத்துகிறார்.ஆனால், அதன் பலனாகத் தாம் கண்ட
|