முகப்பு | தொடக்கம் |
xi |
புலமையும் பெரும் பயிற்சியுமுடைய இப் புலவர்பெருமான் 1914ஆம் ஆண்டில் இந்த அகராதியை வெளியிட்டார் .
பெயருக்கு ஏற்றாற்போல இலக்கியச் சொற்களே இதில் பெரும்பாலும் தரப்பட்டுள்ளன. இலக்கியத்துள் பயின்றுவரும் அருஞ்சொற்களைக் கொண்டது இத் தொகுப்பு . நிகண்டு நூல்களிலும் பிற பெயர்த்தொகுதிகளிலும் பாரதம் , இராமாயணம் , கலித்தொகை , சிந்தாமணி முதலிய இலக்கியங்களிலுமிருந்து புதியனவாகச் சொற்களைத் தொகுத்துத் தந்துள்ளார் . சொற்களேயன்றிப் பொருள்களும் புதியனவாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பொருள்களுக்குச் சான்றாகவுள்ள இலக்கிய மேற்கோள்களையும் எடுத்துத் தந்திருப்பது இந்த அகராதியின் தனிச் சிறப்பாகும் . இஃது இலக்கியம் கற்கும் மாணவர்க்குப் பயன்படத்தக்க சிறப்பு அகராதி ; ஒரு சிற்றகராதி . மாணவர் தமிழகராதி: சென்ற நூற்றாண்டிலே 1883 - ல் கோ. விஜயரங்க முதலியார் தொகுத்து வெளியிட்ட பள்ளியிற் பயிலும் மாணவர்க்கான ' அகராதிச் சுருக்கம் ' மாணவர் பொருட்டாகவே இயற்றப் பெற்றது. அதன்பின் 1920ஆம் ஆண்டுவரை மாணவர்க்கான அகராதிகளை ஆக்குவதில் அறிஞர் பெருமக்கள் ஈடுபட்டிலர் .இந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் மாணவர்க்காகவே செய்யப் பெற்ற முதல்நூல் என்று போற்றத்தக்கது ' மானவர் தமிழகராதி ' . இதனைத் தொகுத்து அளித்தவர் தமிழப் பெரும் பேராசிரியர் எஸ். அனவரதவிநாயகம் பிள்ளையவர்களாவார் . 1921 - ஆம் ஆண்டிலே சென்னை ஸி . குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் புத்தக வெளியீட்டாளர் இதனை வெளியிட்டனர் . இஃது ஏறத்தாழ 26000 சொற்கள் கொண்டதொரு சிற்றகராதியாகும் . இது பள்ளியிற் பயிலும் மாணவர்க்குப் பெரும் பயனுடையது . மாணவர்க்கான சிற்றகராதிகள்: இதன் பின்னர் மாணவர்க்கென ஆக்கப்பெற்ற அகராதிகள் பல ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வெளிவரலாயின . இவற்றின் எண்ணிக்கை இதுநாள் வரை எறத்தாழ 20 - க்கு மேலாக உள்ளன . இவற்றைப் பின்வரும் காலமுறை அட்டவணை விளக்கும் . அடுத்துள்ள அட்டவணையிற் சுட்டிய அகராதிகளுள் முதல் நான்கு அகராதிகள் முற்பட விளக்கப்பெற்றன . இனி ஏனைய அகராதிகள் பற்றிய வரலாறுகளைக் காண்போம் . சொற்பொருள் விளக்கம:் 'சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி ' 1924 - ல் யாழ்ப்பாணத்தில் பிறந்தது . இது கிட்டத்தட்ட குமாரசாமிப் பிள்ளையின் இலக்கியச் சொல்லகராதி போன்றது எனலாம் . இதன் பெயர்க்கு ஏற்பச் சொற்களின் பொருளில் தெளிவுற அமைந்த விளக்கங்களைக் காணலாம் . பிரபந்தங்களின் இலக்கணங்களும் மற்றும் பல சிறப்புப் பெயர்களும் சிறப்பாக எடுத்துத் தக்கமுறையில் விளக்கப்பெற்றுள்ளன . இதுவும் இலக்கிய மாணவர்க்கே தனித்துரிய ஒரு சிறப்புச் சிற்றகராதி எனலாம் . தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி: மாணவர் அகராதிக்குப்பின் வந்த மாணவர்க்குப் பெரும்பயனுடைய அகராதி 'தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி'. பெரும்பான்மை கருதி இப் பெயரிடப்பட்டதே யன்றி முன்னைத் தமிழ்ச் சொற்களையும் இது கொண்டுள்ளது. இதனைத் தொகுத்து அளித்தவர் ச. பவானந்தம் பிள்ளையாவார் . காவல்துறைப் பணியிலிருந்த இவர் தமிழில் நல்ல புலமை பெற்றிருந்தார் ; நன்னூற் காண்டிகை , தொல்காப்பியப் பொருளதிகார உரை , இறையனாரகப்பொருளுரை , யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றைப் பதிப்பித்த பதிப்பாசிரியரும் ஆவார் . ' பவானந்தர் கழகம் ' என்னும் நிறுவனம் கண்டு அதன்வழிப் பல நூல்களை வெளியிட்டார் இவர் தொகுத்த இந்த அகராதியை மாக்மில்லன் கம்பெனியார் அழகுற அச்சிட்டு வெளியிட்டனர் . இந்த அகராதியில் பற்பல தகவல்களும் வகைப்பட அமைத்துத் தரப்பட்டுள்ளன . இந்த அகராதியின் தொகுப்பும் அமைப்பும் குறித்து ஆசிரியர் வழங்கிய முகவுரைச் செய்திகளை இங்கே காண்போம் . |
![]() |
![]() |
![]() |