முகப்பு | தொடக்கம் |
x |
ஆறாவது , மேற்கோள் காட்டுவதில் தகுதியான நியமங்கள் கையாளப்படவில்லை . தக்க நியமங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது . மேற்குறித்த அம்சங்களிளெல்லாம் திருத்தமெய்தியது சென்னை சர்வ கலாசங்கத்தார் வெளியிட்டுள்ள ' தமிழ் லெக்சிகன் ' ஆகும் . * இத்தனை சிறப்புடைய தமிழ் லெக்சிகன் தமிழுணர்ந்தார்க்கேயன்றிப் பிறமொழியாளர்க்கும் பெரிதும் பயன்படும் பேரகராதியாக விளங்கிவருகிறது . இதனினும் மேம்பட்ட சிறப்புடைய பேரகராதி இனித்தான் தோன்றவேண்டும் . ஒருசொற் பல பொருள் விளக்கம்: பேரகராதிகள் பலவாக வளர்நிலையுற்றபோதிலும் ஆங்கிலத்தில் இருப்பதுபோலப் பல்வேறு படிநிலையாளர்க்கும் ஏற்றவகையில் இயற்றப்பட்ட அகராதிகள் சென்ற நூற்றாண்டில் அதிகமாயில்லை சூடாமணி நிகண்டின் பதினோராம் தொகுதியில் உள்ள ஒருசொற் பல பொருள்களை அகராதியாக மாற்றி அமைக்கும் முயற்சி சென்ற நூற்றாண்டின் மத்தியில் தோற்றமாயிற்று . அண்ணாசாமிப் பிள்ளை என்பவர் , ' ஒருசொற் பலபோருள் விளக்கம் ' என்னும் அகராதியை 1850-ல் வெளியிட்டார் . இதில் அத் தொகுதியில் உள்ள 1575 சொற்களும் அகராவரிசையில் தரப்பெற்று அவற்றிற்கு நிகண்டாசிரியர் தந்த பொருளும் அதற்கு விளக்கமும் சேர்த்துத் தரப்பட்டுள்ளன . இஃது இலக்கிய மாணவர்க்கு ஒரு சிற்றகராதியாகப் பயன்படத்தக்கது . அகராதிச் சுருக்கம்: சென்ற நூற்றாண்டில் பள்ளியிற் பயிலும் மாணவர்க்கு ஏற்றதாகச் செய்து அளிக்கப் பெற்ற சிறிய அளவிலான நூல் , ' அகராதிச் சுருக்கம் ' .இது கோ.விஜயரங்க முதலியாரால் 1883-ல் வெளியிடப்பெற்றது . இதற்கு அவர் தந்த ஆங்கிலத் தலைப்பு 'தமிழ் பாக்கெட் டிக்ஷனரி' (Tamil Pocket Dictionary) என்பதாகும் . இதன் ஆசிரியர் , மாணவர்க்கு ஆங்கிலமும் தமிழும் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் . ஆங்கிலத்தில் மாணவர் படிநிலைகளுக்குத் தக்கவண்ணம் பல்வேறு தரங்களில் அகராதிகள் இருப்பது கண்டு , தமிழ் மாணவர்க்காக இத் தொகுப்பினை ஆக்க முற்பட்டார் . ஆங்கில அகராதிகளின் போக்கினைப் பின்பற்றி அகரவருக்கம் முதல் வகரவருக்கம் வரை 3615 சொற்களுக்குத் தெளிவான முறையில் பொருள்விளக்கமும் தந்துள்ளார் . ஒவ்வொரு பக்கத்திலும் அமைந்த எழுத்து வருக்கத்தில் தொடங்கும் குறட்பா ஒன்றையும் தலைப்பில் சேர்த்துள்ளார் .
இந்த அகராதித் தொகுப்பைச் சென்னைச் சர்வ கலாசாலைத் தமிழ்த் தலைமைப் புலவர் கோ . இராசகோபாலப் பிள்ளை பரிசோதித்துத் தந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது . அகராதியின் முடிவில் பெயரும் வினையுமாய்ப் பொருள் தரும்
சொற்களும் (237 ) அகரவரிசையில் அமைக்கப்பெற்று அவற்றிற்குரிய பெயர் வினைப் பொருள்களும்
ஓர் அட்டவணைபோலச் சேர்க்கப்பட்டிருக்கின்றன . இப் பகுதி , மாணவர்க்குச் சொல்நிலை தெரிந்து பொருள்காணவேண்டும் என்னும் பெற்றியை
விளக்குவதாகும் .
இலக்கியச்சொல்லகராதி: இலக்கியச்சொல்லகராதியை ஆக்கியவர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் பிள்ளையாவார் . இவர் செய்யுளும் உரைநடையும் வல்ல பெரும்புலவர் . சில நூல்களைத் தம் புத்துரையுடன் பதிப்பித்துமுள்ளார் . புத்தாக்கமாக இவர் இயற்றிய இலக்கணச்சந்திரிகை , வினைப் பகுபத விளக்கம் என்னும் இருநூல்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன . இவை தமிழ் மாணவர் இலக்கணப்புலமை நிரம்பக் கற்கவேண்டிய விளக்க நூல்களாகும் . இவர் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளையின் பேரகராதிக்கும் துணைநின்றவர் . இத்தகு பெரும்
* இலக்கியச் சிந்தனைகள் - முதற் பதிப்பு - பக்கம் 163 - 164. |
![]() |
![]() |
![]() |