முகப்பு | தொடக்கம் |
xxii |
தத்தம் பதிப்புகளில் திருக்குறட் சொல்லடைவு , பொருளடைவுகளைத் தொகுத்து அகரவரிசையில் தந்துள்ளனர். திரு. ந. சி. கந்தையாப்பிள்ளை 'திருக்குறள் அகராதி' என்னும் பெயரில் அமைந்த கையடக்க நூலை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகத்தின் வழியாக வெளியிட்டுள்ளார். தஞ்சைத் திருவாளர் சாமி. வேலாயுதம் பிள்ளையவர்கள் வெளியிட்ட 'திருக்குறட் சொல்லடைவு' திருக்குறளுக்கு அமைந்த இலக்கண விளக்கங்களோடுகூடிய விளக்கமான ஓர் அகராதியாகும். முந்திய மார்க்கசகாயரின் திருக்குறள் அகராதியைப் பயன்படுத்திச் சொற்பொருளும் சேர்த்துத் 'திருக்குறள் சொற்பொருள் அகரவரிசை' என்னும் கையடக்கமான தொகுப்பைத் திரு. சு. அ. இராமசாமிப் புலவர் அமைத்தார். இதனைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் 1969-ல் தமது 1354ஆம் வெளியீடாகத் தமிழுலகுக்கு அளித்தனர். நாலடியார் உரைவளப் பதிப்பில் சொல்லடைவும் சேர்ந்திருக்கக் காணலாம். திவ்வியப் பிரபந்தத்தில் வரும் சொற்பொருள்களை விளக்கும் 'திவ்வியப் பிரபந்தச் சிற்றகராதி' ஒன்றை அரசாங்கக் கீழ்த்திசைச் சுவடிநிலையம் வெளியிட்டுள்ளது. திருவரங்கத்திலிருந்து 'தேவஸ்தான பத்திரிகை' என்பதனை முன்பு வெளியிட்டு வந்த பார்த்தசாரதி ஐயங்கார் திவ்வியப் பிரபந்தச் சொற்கள் , வியாக்கியானங்களில் இடம்பெற்ற அருஞ்சொற்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஏற்ற விளக்கங்களுடன் வெளியிட்டுள்ள 'திவ்வியப் பிரபந்த அகராதி' (1963), இத் தொகைநூலுக்கு அமைந்த பெரிய அகராதியாகும். கம்பராமாயணம் என்னும் தமிழ் பெருங்கடலுக்குச் சொற்பொருளகராதி தொகுத்து முற்றுவித்தவர் அ. சே. சுந்தரராஜன் என்பவராவர். இவர்தம் தொகுப்பிற்கு 'ஸ்ரீ மத் கம்பராமாயண அகராதி' என்பது பெயர். தமிழ் விவிலிய நூலுக்கு விளக்க அகராதி ஒன்றை ஏ. சி. கிலேற்றன் ஐயர் தொகுத்துத் தந்துள்ளார். வேத அகராதி என்னும் பெயரில் ஐந்து பாகங்கள் கொண்டதாய் இது உள்ளது. இதனைக் கிறித்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் முதுகலை, எம். பில்., டாக்டர் பட்டங்களுக்கான ஆய்வேடுகள் தரபட்டுவருகின்றன. இங்கெல்லாம் ஆய்வுப்பொருளாகத் தமிழ்நூல்கள் பலவற்றை எடுத்துக்கொண்டு ஆய்ந்தவர்கள் அந்தந்த நூல்களுக்கான அகராதிகளும் தொகுத்து அமைத்துள்ளனர் என்பது தெரியவருகிறது. மொழியியல் அகராதிகள்: சிற்சில மொழிக்கூறுகளை தனிப்படப் பிரித்துத் தொகுத்து அடைவுபடுத்த முயன்றனர் பலர். 1883-ல் வெளிவந்த அகராதிச் சுருக்கம் என்னும் நூலில் 'பெயரும் வினையுமாய்ப் பொருள்தரு சொற்களின் அகராதி' பின் இணைப்பாகக் காணப்படுகிறது. தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியில் இந்துஸ்தானிச் சொற்கள் முதலியன தனித்தனி பின்னிணைப்புகளாகக் காணப்படுகின்றன. 1939-ல் வெளிவந்த 'தமிழறிஞர் அகராதி' என்பதில் பின்வரும் தனித்தொகுப்பு அகராதிகள் காணப்படுகின்றன. 1. சமஸ்கிருத வழக்கில் வரும் பொருளும் வேறுபாடான பொருளும் தரும் தமிழ் வழக்காற்றுச் சொற்கள்; 2. தமிழ் இலக்கிய வழக்கில் அருகியும் பேச்சுவழக்கில் மலிந்தும்வரும் தெலுங்குச் சொற்கள்; 3. தென்னிந்தியாவில் முகம்மதியர் வருகைக்குப் பிறகு தமிழில் வழங்கிவரும் உருது, இந்துஸ்தானி, பாரசீகம், அரபுச் சொற்கள்; 4. தமிழ்மக்கள் தற்காலத்திய நாகரிகத்தின் வன்மையால் பெரும்பாலும் பேச்சுவழக்கில் உபயோகிக்கும் ஆங்கிலச் சொற்கள்; 5. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் போர்த்துகீசிய மொழிகள்; 6. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் பிரென்சு மொழிகள்; 7. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் டச்சுச் சொற்கள்; 8. தமிழப் பேச்சுவழக்கில் சிறுபான்மை வழங்கிவரும் கிரீக் மொழிகள்; 9. தமிழ்ப் பேச்சுவழக்கில் சொற்பமாக வழங்கும் டர்க்கிச் சொற்கள்; 10. தமிழப் பேச்சுவழக்கில் சொற்ப மாறுபாடுடன் வழங்கிவரும் இந்துஸ்தானி மொழிகள்; 11. பேச்சுவழக்கிலும் இலக்கியவழக்கிலும் ஆங்கிலத்தில் வழங்கும் சில தமிழ்மொழிகள்; 12. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாறுதலான பொருள்களைத் தரும் தமிழ்மொழிகள்; 13. கொச்சை மொழிகளும் |
![]() |
![]() |
![]() |