முகப்பு | தொடக்கம் |
(அந்தக் கதையும் இந்நூலில் தனியே இணைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுகதை எழுவதற்குக் காரணமானவர் புலவர் தில்லை தா.அழகுவேலனார்.)
சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் 1947 முதல் ஈராண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார் முடியரசனார். (பள்ளிப் பெயர் கா.சு. துரைராசு. அதன் தமிழ் வடிவம் முடியரசன்) அப்போது உடன் பணியாற்றியவர் புலவர் தா.அழகுவேலனார். முடியரசன் இவரை அண்ணன் என்று மதிப்போடு அழைப்பார். வழக்கம்போல் கடற்கரை சென்று இருவரும் உரையாடிக் முடியரசனார் சிந்தனை வயப்பட்டு நின்றார். அவர் மனத்தில் மின்னியதைச் சொற்களால் அளந்து சொன்னார். “தமிழன் வீரத்தை அவ்வாறு இழிவாகக் கருதல் வேண்டா. தற்கொலையாக இருப்பின் ‘கடலில் மாய்ந்த’ என்றுதான் அமைந்திருக்கும். ‘கடலுள் மாய்ந்த’ என்றிருப்பதால் எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும்”. முடியரசனார் தந்த விளக்கத்தில் அழகுவேலனார்க்கு அளவற்ற மகிழ்ச்சி! “அட! நீ சொல்வது நன்றாக இருக்கிறது. இதை வைத்து ஒரு கதை எழுது” அவர் கூறியதற்கிணங்க எழுதிய கதைதான், போர்வாள் (25.9.1948) இதழில் வெளிவந்த ‘இளம் பெருவழுதி’ அதன் விரிவாக உருவெடுத்ததே ‘இளம்பெருவழுதி’ நாடகக் காப்பியம். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் முயற்சியால், அங்குள்ள தமிழியற் புலத்தில் ஓர் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 1985ஆம் ஆண்டு இந்நாடகக் காப்பியம் உருவானது. |
மேல் | அடுத்த பக்கம் |