முகப்பு | தொடக்கம் |
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையால் பாதுகாக்கப்பட்டு வந்த இதன் கையெழுத்துப் படியை அரிதின் முயன்று பெற்று, அச்சேறும் வாய்ப்பை உருவாக்கியவர் திரு.மு.பாரி. முடியரசனாரின் மூத்த மைந்தர் மு.பாரி அவர்களின் விடா முயற்சியும், தமிழ்மண் பதிப்பகம் கோ.இளவழகனார் அவர்களின் பேருழைப்பும், பாவலரின் அனைத்துப் படைப்புகளும் ஒருசேரக் கிடைக்கும் நல்வாய்ப்பை உருவாக்கியுள்ளன. தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், அறிஞர் பலரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி நல்ல சூழலை அறிவுலகில் மலரவைத்துள்ளார். முடியரசனார் படைப்புகள் முழுமையாகக் கிடைக்கும் சூழல் மலர்ந்ததற்கும் அவரே காரணம்! தாளில் உறங்கிக் கிடந்த ‘இளம்பெருவழுதி’ நம் மடியில் தவழும் நல்வாய்ப்பை உருவாக்கியோர் - நம் நன்றிக்குரியோர். “தனக்கென வாழும் தன்னலவாதிகள் எங்கும் இந்த வரிகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாத வியப்புடன் உலகம் தமிழர்களை மதிப்புடன் பார்க்கிறது. “ உண்டா லம்மஇவ்வுலகம்... இந்தப் புறநானூற்று வரிகள் தமிழினத்தின் சிந்தனை முதிர்ச்சிக்கு முகவரியாகிவிட்டன. |
மேல் | அடுத்த பக்கம் |