முகப்பு | தொடக்கம் |
புறநானூற்றில் இப்பாடலை எழுதிய புலவன் யார்? புலவனும் அவனே, அரசனும் அவனே! பாண்டிய அரசமரபைச் சேர்ந்த இளம்பெருவழுதி எழுதியது அப்பாடல்! அவன் சிந்தனை வியப்படையச் செய்கிறது. வாழ்வோ துயரத்தைத் தூண்டுகிறது. கடலுள் மூழ்கி இறந்து போனான் அந்த அரசப் புலவன் ! அதனால் வரலாறு அவனுக்குப் பெயரிட்டது ‘கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி’. அவனது புறநானூற்றுப் பாடல் எல்லோரையும் கவர்ந்தது போலவே முடியரசனாரையும் கவர்ந்துள்ளதில் வியப்பில்லை. இளம்பெருவழுதிக்கு ஒரு நாடகக்காப்பிய மாளிகை எழுப்பி, அந்தப் புலமை வேந்தனைத் தனிவெளிச்சத்தில் அவர் நிறுத்த நினைத்ததுதான் வியப்பு! நினைத்ததை முடியரசனார் நிறைவேற்றி விட்டார். ‘போரில்லா உலகம் வேண்டும்’ என்னும் மையச் செய்தியை நோக்கி, இளம்பெருவழுதியின் வாழ்க்கை நிகழ்ச்சிப் படிகளின் வழியாக நம்மை நடத்திச் செல்கிறது இந்த நாடகக் காப்பியம். மனோன்மணீயம் பெ.சுந்தரனாருக்குப் பின் புலவர் குழந்தை, புலவர் ஆ.பழனி, பாவலர் ச.பாலசுந்தரம் முதலியோரால் வளப்படுத்தப்பட்ட நாடகத்தமிழுக்கு முடியரசனாரும் ‘இளம்பெருவழுதி’யால் அணி சேர்த்துள்ளார். கிடைத்தது ஒருபாடல்தான் என்றாலும், முடியரசனார் தம் கற்பனையாற்றலால் இளம் பெருவழுதியின் முழுவாழ்வையும் நமக்குக் இந்நூலால் கிடைக்கச் செய்துவிட்டார். வழுதிக்குப் பெற்றோராக வலந்திரு பாண்டியன் - மாறன்மாதேவி இருவரையும் காட்டுகிறார். அறிவு புகட்டும் ஆசிரியராக கோட்புலி மறவன் வருகிறார். வழுதியின் வாழ்வில் சுரும்பார்குழலி, எழிலி எனும் இருபெண்கள் குறுக்கிடுகின்றனர். நெறிகாட்டி நிலைப்படுத்தும் அமைச்சராக |
மேல் | அடுத்த பக்கம் |