வ - று. ஆ, ஈ, ஏ, ஐ, ஓ, ஒள; மா, மீ, மூ, மே, மை, மோ; தா, தீ, தூ, தே, தை; பா, பூ, பே, பை, போ; நா, நீ, நே, நை, நோ; கா, கூ, கை, கோ; வா, வீ, வே, வை; சா, சீ, சே, சோ;, யா; நொ, து எனவரும். இவை சிறப்புளவெனவே, சிறப்பில்லனவும் சிலவுளவாயின. அவை ஆறாமுயிரும், பகரவீகாரமும், சி, சூ, சை, கௌ, வௌ என்பன போல் வனவுமெனக்கொள்க. ‘உயிர் மவிலாறும்’ என்றதனை, அவ்வவ்வருக்கங்களி லெனக் கொள்க | (2) | | (129) | பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் எழுத்தீ றாகத் தொடரு மென்ப. | எ - ன், மேல் நிறுத்தமுறையானே தொடரெழுத்துப்பதத்திற்கு வரை யறையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பகாப்பதம் இரண்டெழுத்துமுதல் ஏழெழுத்தீறாகவும் பகுபதம் இரண்டெழுத்துமுதல் ஒன்பதெழுத்தீறாகவும் தொடருமென்பர் புலவர் எ - று. வ - று. அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி எனப் பகாப்பதம் தொடர்ந்தவாறு. கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், * அத்திகோசத்தான், உத்திரட்டாதியான் எனப் பகுபதந் தொடர்ந்தவாறு. கங்கைகொண்ட சோழபுரம், இரதநூபுர சக்கரவாளம் (சூளா. இரதநூபுர. 12), பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றற்றொடக்கத்து ஒட்டுப்பெயர்க்கு வரையறையில்லை யெனக்கொள்க. | (3) | | (130) | பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம். | எ - ன், நிறுத்தமுறையானே பகாப்பதமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒன்றாய்நின்று ஒருபொருள் தருமொழியைப் பலவாகப்பிரித்தால் அதனால் வருவதோர்பயனற்று இடுகுறியாய்த் தொன்றுதொட்டு ஒரு பிண்டமாய் நடக்கின்ற பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமென்று வழங்குகின்றவை பகாப்பதம் எ - று. வ - று. நம்பி, நங்கை, சாத்தன், சாத்தி, கொற்றன், கொற்றி, தந்தை, தாய், யானை, குதிரை, உயிர், உடம்பு, மலை, வெற்பு, தீ, நீர், ஒன்று, கழஞ்சு, கலம் எ - ம்; வான், நிலம், அகம், புறம் எ - ம்; யாண்டு, வேனில், பங்குனி, ஆதிரை, பகல், இரா, காலை, மாலை, 1நெருநல், இன்று எ - ம்; கண், செவி, மூக்கு, கை, கால், கோடு, சினை, தளிர், பூ, காய், கனி எ - ம்; செம்மை, வெண்மை, கருமை, நெடுமை, குறுமை, இன்மை, உண்மை எ - ம்; உணல், தினல், செலவு, வரவு, கூத்து, பாட்டு எ - ம் | * யானைமேலேற்றுமளவான நிதிக்குவையையுடையவன். | | | | |
|
|