46

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
வரும் இத்தொடக்கத்துப் பொருளாதி யறுவகைப்பொருட் பெயர்களெல்லாம்
பெயர்ப்பகாப்பதம். உண், தின், நட, கிட, போ, வா, உரை, இரு, செல்
என்றற்றொடக்கத்தன வினைப்பகாப்பதம். மன், மற்று, தில், அம்ம, கொல், மியா, இக,
மோ, மதி என்றற்றொடக்கத்தன இடைப்பகாப்பதம். சால, உறு, தவ, நனி, கழி, கலி,
ஒலி, முழக்கு என்றற்றொடக்கத்தன உரிப்பகாப்பதம். பெயருள்ளும் சாத்தையுடையான்
சாத்தன், கொற்றையுடையான் கொற்றன், கூத்தையுடையான் கூத்தனென்று இவ்வாறு
பொருள்படின் அவை பகாப்பதமாகா; இடுகுறி மாத்திரையாய் நிற்கிலே
பகாப்பதமாவதெனக்கொள்க. அவன், அவள், அவர் என்றற்றொடக்கத்தன ஈறு பகுக்க
வேறுபால்காட்டலிற் பகுபதமாம் பிறவெனின், அவை ஒன்றாய் நின்று
ஒருபொருளாவதல்லது ஈறுபிரித்தாற் பகுதி வேறு பொருள்படாமையின், அவற்றிற்குப்
பகுதிவிகுதித் தன்மையின்மையின் ஆகாவென்க. இனி, சொல் நான்காகவேண்டியது
என்னையோவெனின், பெயர்ச்சொல் பொருளை விளக்குதலானும், வினைச்சொல்
பொருளதுதொழிலை விளக்குதலானும், இடைச்சொற்கள், இவ்விரண்டிற்கும்
2விகுதியுருபுகளாகியும், வேற்றுமை உவமை சாரியையுருபுகளாகியும், சில பெயராகியும்,
சில வினையாகியும், தெரிநிலை, தேற்றம், ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை,
எச்சம், வினா, விழைவு, ஒழியிசை, பிரிப்பு, கழிவு, ஆக்கம், இசைநிறை, அசைநிலை,
குறிப்பு முதலான பொருண்மை விளக்குதலானும், உரிச்சொல், 3பெயராமெனினும்
பொருளை விளக்கலும் பெரும்பான்மையும் உருபேற்றலுமின்றிப் பொருட்குணத்தையே
விளக்குதலானும், சில வினைபோல் வருதலானும் சொல்லிற்கு இந்நாற்பகுதியும்
இவட்கிடப்பும் வேண்டுமெனவேகொள்க. அன்றியும், “பெயரினும் வினையினு மொழிமுத
லடங்கும்” என்ற மிகத்தெளிகேள்வி அகத்தியனாரும், “சொல்லெனப்படுப ‘பெயரே
வினையென், றாயிரண் டென்ப வறிந்திசி னோரே” (பெயரியல், 4) என்ற
ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாரும், “அவைதாம், பெயர்ச்சொ லென்றோ
தொழிற்சொ லென்றா, 5இரண்டன் பாலா யடங்குமன் பயின்றே” என்ற அளவறுபுலமை
அவிநயனாரும் பின்பும் இப்பகுதியும் இம்முறையும் வேண்டினாரெனக்கொள்க.

     (பி - ம்.) 1 நெருகை 2 விகுதியுருபுதவலானும் 3 பெயரேயெனினும் 4 பேரே 5
இரண்டின்

(4)

     

(131)

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின்
வருபெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.

     எ - ன், பகுபதமாவன உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பொருளே இடனே காலமே உறுப்பே பண்பே தொழிலே என்றிவ்வாறும் காரணமாகவரும் பெயர்ச்சொற்களும், காலம்பற்றிவரும் வினைச்சொற்களும் பகுபதங்களாம் எ - று.

     பொருண்முதன்மூன்றும் முதலும், சினைமுதன்மூன்றும் சினையுமா யடங்குமென்பதறிவித்தற்கு இம்முறை வைத்தாரென்க. ‘பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின், வருபெயர்