| 2.- உயிரீற்றுப்புணரியல் | 71 | | | | வ - று. மகக்குறிது, விளக்குறிது, (மக, விள) + (சிறிது, தீது, பெரிது) எ - ம்; (மக, விள) + (குறுமை, சிறுமை, தீமை, பெருமை) எ - ம் இயல்பகரவீற்றுப் பெயர்ப்பதமுன் இருவழியும் கசதபக்கள் மிக்கன. உணக்கொண்டான், தரக்கொண்டான், சாவக்கொண்டான், (உண, தர, சாவ) + (சென்றான், தந்தான், போயினான்) என இயல்பகரவீற்று வினைப்பதமுன் அல்வழியில் மிக்கன. கொள்ளெனக்கொண்டான், ஆங்கக்கொண்டான், புலிபோலக்கொண்டான், (கொள்ளென, ஆங்க, புலிபோல) + (சென்றான், தந்தான், போயினான்) என இயல்பகரவீற்று இடைப்பதமுன் மிக்கன. தடக்கை, வயக்களிறு, குழக்கன்று என இயல்பகரவீற்று உரிப்பதமுன் மிக்கன. தாழக்கோல், தமிழப்பல்லவதரையரென அகரச் சாரியைபெற்ற விதிஅகரவீற்றுப் பெயராயவற்றின்முன் இருவழியும் மிக்கன. வட்டக்கடல், (வட்டம்) + (சுனை, தாழி, பாறை) என ஈற்று மகரம் கெட்டு விதிஅகரவீற்றுப் பெயராயதன்முன் மிக்கன.
இயல்புயிரும் விதியுயிருமாகிய ஏனைய ஈற்றையும் இவ்வாறே அறிந்து முடிக்க.
(*தாரா, மூங்கா, யா, கா) + (கடிது, சிறிது, தீது, பெரிது) எ - ம்; (கடுமை, சிறுமை, தீமை, பெருமை) எ - ம் இயல்புஆகாரவீற்றுப் பெயர்ப்பதமுன் இருவழியும்மிக்கன. ((உண்ணா, தின்னா) + (கொண்டான், சென்றான், தந்தான், போயினான்) எ - ம்; உண்ணாக்கொற்றன், (உண்ணா) + (சாத்தன், தேவன், பூதன்) எ - ம் ஆகாரவீற்று வினைப்பதமுன் மிக்கன. “உயிருறுப் புயிர்மெய் தனிநிலை யெனாஅக், குறினெடி லளபெடை மூவினமெனாஅ” (இ. வி. சூ. 82, உரை; யா. வி. சூ. 1, உரை) என ஆகாரவீற்றிடைப்பதமுன் ககரம் மிக்கது. (உசா, உயா, வயா) + (கடிது, சிறிது, தீது, பெரிது) எ - ம்; (கடுமை, சிறுமை, தீமை, பெருமை) எ - ம் ஆகார வீற்று உரிப்பதமுன் இருவழியும்மிக்கன.
கிளிக்கால், (கிளி) + (சிறகு, தலை, புறம்) என இகரவீற்றுப் பெயர்ப்பதமுன் வேற்றுமைக்கண்மிக்கன. (ஓடி, ஆடி, பாடி) + (கொண்டான், சென்றான், தந்தான், போயினான்) என இகரவீற்று வினைப்பதமுன் மிக்கன. (இனி, அணி) + கொண்டான், சென்றான், தக்கான் போயினான்) எனக்காலமும் இடமும் காட்டும் இகர வீற்று இடைப்பதமுன் மிக்கன. கடிக்கமலம், (கடி) + (சரோருகம், தாமரை, பங்கயம்) என இகர வீற்று உரிப்பதமுன்மிக்கன. ஊர்வழிக்கொண்டான், (ஊர்வழி) + (சென்றான், தந்தான், போயினான்) என இகரவீற்று உருபுப்பதமுன் மிக்கன.
ஈக்குறிது , (ஈ) + (சிறிது, தீது, பெரிது) எ - ம்; (கால், சிறை, தலை, புறம்) எ - ம் ஈகாரவீற்று ஓரெழுத்துப் பெயர்ப்பதமுன் இருவழியும் மிக்கன. (தழீஇ, நிறீஇ) + (கொண்டான், சென்றான், தந்தான், போயினான்) என ஈகாரவீற்றுவினைப்பதமுன் மிக்கன. மீக்கொள், மீச்செல், மீத்தா, மீப்போ *தாராக்கடிதென ஒட்டுக( உண்ணாக்கொண்டான்..............என இயைக்க. | | | | | |
|
|