| 74 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | ரெச்சமுன் இயல்பாயின. (பொன்னன்ன, பொன்போன்ற, பொன்னனைய, பொன்னிகர்த்த, பொன்னொத்த1) + (குதிரை, செந்நாய், தகர், பன்றி) என 2உவமப்பண்புகொள் பெயரெச்சமுன் இயல்பாயின. (பெரிய, சிறிய, செய்ய, இனிய, தண்ணிய) + (கமலம், சரோருகம், தாமரை, பங்கயம்) எனப் பல்வகைப் பண்புகொள் பெயரெச்சமுன் இயல்பாயின. (உண்ணாத, தின்னாத) + குதிரை, செந்நாய், தகர், பன்றி) எனப் பெயரெச்ச எதிர்மறை முன் இயல்பாயின. (உண்டன, தின்றன, வாழ்க, செல்க) + (குதிரை, செந்நாய், தகர், பன்றி) என முற்றுவினைமுன் இயல்பாயின. சாத்தன குதிரைகள்; செந்நாய்கள், தகர்கள், பன்றிகள் என ஆறனுருபின்முன் இயல்பாயின. சிலகுதிரை, பலகுதிரை; செந்நாய், தகர், பன்றி என அஃறிணைப்பன்மைமுன் இயல்பாயின. அம்ம கொற்றா; சாத்தா, தேவா, பூதா என உரையசையிடைச்சொல் முன் இயல்பாயின.
உண்ணாக்குதிரை, ஓடாப்பூட்கை (முருகு. 247; சிறுபாண். 83) எனவரும் பெயரெச்ச எதிர்மறை ஆகாரவீறாகலின் விலக்கினவெனக் கொள்க.
(பி - ம்.) 1 (அன்ன, இன்ன, என்ன) + குதிரை 2 உவமத்தொழில் கொள் பெயரெச்சம் இயல்பாயிற்று. | (17) | | | (167) | வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. | எ - ன், எய்தாததெய்துவித்தலும், எய்தியது 1இகந்துபடாமற் காத்தலும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வாழியவென்னும் வியங்கோளின் ஈற்றுயிர்மெய் கெடலு முரித்து; அதுகெட்டு இகரவீறாய் 2நின்றாலும் ஆண்டும் இயல்பேயாம் எ - று.
3உம்மைகள் எதிர்மறைக்கண்ணவாகலான், கெடாமையுமுரித்தாகலும் இயல்பிகந்துபடாமையும் கொள்க. வருமொழி உரையாமையின் நாற்கணமும் வரின் யகரம்கெடுதலும் 4கெடாமையும் கொள்க.
வ - று. வாழிய, வாழி, வாழிகொற்றா; சாத்தா, தேவா, பூதா, ஞெள்ளா, நாகா, மன்னா, யவனா, வளவா, அபயா எனவரும்.
(பி - ம்.) 1இறந்து 2நின்றாலும் இயல்பேயாம் 3உம்மை | (18) | | | (168) | சாவவென் மொழியீற் றுயிர்மெய்சா தலும்விதி. | எ - ன், எய்தியதன்மேற் சிறப்புவிதியுணர்த்துதல்நுதலிற்று.
(இ - ள்.) சாவவென்னும் மொழியிறுதியில்நின்ற உயிர்மெய் கெடுதலும் முறைமை எ -று.
வ - று. சாவ + குத்தினான் = சாக்குத்தினான் எனவரும்.
உம்மையால், 1கெடாமையே வலியுடைத்தென்க.
(பி - ம்.) 1கெடாமலே | (19) | |
|
|