| நன்னூல் விருத்தியுரை | வடிவு ஒலிவடிவு, வரிவடிவு. இவற்றுள் ஒன்றும் பலவும் ஒத்து இனமாய் வருதல்58 கண்டுகொள்க. சார்பெழுத்திற்குப் பெயர் கூறாது ஒழிந்தார் ஆய்தம் தனிநிலை ஆதலானும் ஏனைச் சார்பெழுத்திற்குச் சுட்டு, வினா என்று விதந்து ஓதினவை ஒழிந்த முதலெழுத்தின் பெயரே பெயராய் அடங்குதலானும் என்க. இச்சூத்திரம் ஏதுவின் முடித்தல் என்னும் உத்தி. (17) | | எழுத்துகளின் முறைவைப்பு | | {73} | சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல் நடத்த றானே முறையா கும்மே. | எ-னின், நிறுத்த முறையானே (57) முறை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: சிறப்பினானும் இனத்தினானும் பொருந்தி, இவ்வுலகத்து அகரம் முதலாக வழங்குதல்தானே எழுத்தினது முறை ஆம் எ-று. குறிலினது விகாரமே நெடில் ஆதலான் குறில் முன் நிற்றலின், ‘சிறப்பின்’ என்றும் நெடில் இனமாய்ப் பின் நிற்றலின், ‘இனத்தின்’ என்றும் நாதமாத்திரையாய்59 எல்லா எழுத்திற்கும் காரணமாய் முன் நிற்றலின், ‘அம்முதல்’ என்றும் எல்லா எழுத்திற்கும் வைத்த முறைக்காரணம் உயிர்களான் முற்றும் உணர்தல் ஆகாமையின், ‘நடத்த றானே’ என்றும் கூறினார். <அங்ஙனம்60 ஆயினும் நெடுங்கணக்கினுள், “அகரமுத னகர விறுவாய்க் (தொல். நூன். 1) கிடக்கைமுறை ஆதற்குக் காரணமும் ஒருவாறு காட்டுதும்.> <அகரம்61 முதலிய பன்னீர் உயிரும் தனித்து இயங்கும் ஆற்றல் உடைமையானும் ககரம் முதலிய பதினெட்டு மெய்யும் அகரத்தோடு கூடியல்லதுஇயங்கும் ஆற்றல் இன்மையானும் அச்சிறப்பும் சிறப்பின்மையும் நோக்கி, உயிர் முன்னும் மெய் பின்னுமாக வைக்கப்பட்டன. இனி உயிர்களுள் அ, இ, உ என்பன முறையே அங்காந்து கூறும் முயற்சி- ------------------------------- 58எழுத்துகள் ஒன்றும் பலவும் ஒத்து இனமாய் வருதலை மயிலைநாதர் (நன். 71) சிறிது விளக்கமாகக் கூறுவார். 59“அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும் என்னும் பரிமேலழகர் உரையோடு (குறள். 1) இவ்வுரையை ஒப்பிடுக. 60தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 40). 61தொல்காப்பியச் சூத்திர விருத்தி (பக். 42-43). | |
|
|