எனவாங்கு-தனிச்சொல். துணைவளைத்தோ ளிணைமெலியத் தொன்னலந் தொடர்ப்புண்டாங் கிணைமலர்த்தா ரருளுமே லிதுவதற்கோர் மாறென்றுதுணைமலர்த்தடங்கண்ணார்துணையாகக்கருதாரோ -இது தரவு. அதனால்-தனிச்சொல். செவ்வாய்ப் பேதை யிவடிறத் தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே”-சுரிதகம். இஃது, இடையிடை தனிச்சொற்பெற்றுச் சுரிதகத் தாலிற்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா. இனிச் சுரிதகமில்லாததூஉம் வந்தவழிக்கண்டுகொள்க. “பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர்புடைசூழப் படைப்பரிமான் றேரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே -இது தரவு. ஆங்கொருசார் உச்சியார்க் கிறைவனா யுலகமெலாங் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார் வச்சிரங்கைக் காணாத காரணத்தான் மயங்கினரே. ஆங்கொருசார் அக்கால மணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே. ஆங்கொருசார் மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார் வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே. அதா அன்று, [இவை மூன்றுந் தாழிசை
கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான் இன்புக ழொருவன் செம்பூட் சேஎய் யென்றுநனி யறிந்தனர் பலரே தானு மைவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே”-இது சுரிதகம். |