“தோடா ரெல்வளை நெகிழ நாளு நெய்த லுண்கண் பைதல் கலுழ வாடா வவ்வரி புதைஇப் பசலையும் வைக றோறும் பைப்பயப் பெருக நீடா ரிவரென நீண்மணங் கொண்டார் கேளார் கொல்லோ காதலர் தோழி வாடாப் பௌவ வறன்முகந் தெழிலி பருவம் பெய்யாது வலனேர்பு வளைஇ வோடா மலையுங் வேலிற் கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே” இஃது, இடையிட்டு வந்தமையால் இடையீட்டெதுகை. “துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநா ளணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி வடியமை யெஃகம் வலவயி னேந்தி தனியே வருதி நீயெனின் மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.” இஃதிரண்டா மெழுத்தின் மேலேறின உயிரொன்றி வந்தமையால் உயிரெதுகை. “துவைக்குந் துளிமுந்நீர்க் கொற்கை மகளி ரவைப்பதம் பல்லிற் கழகொவ்வா முத்த மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலி ஊணங்கு மமுதமு மந்நலார் பாடல்.” இது, முன்னிரன்டடியுமோரெதுகையாய்ப் பின்னிரண்டடியும் வேறோரெதுகையாய் வந்தமையால் இரண்டடியெதுகை. “பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.” இது, மூன்றா மெழுத்தெதுகை. “கயன் மலைத்தன்ன கண்ணிணை கரிதே தடமுலைத் திவளுத் தனிவடம் வெளிதே நூலி னுண்ணிடை சிறிதே யாடமைத் தோளிக் கல்குலோ பெரிதே..” இஃதடிதோறுங்கடைச்சீர்மறுதலைப்படத்தொடுத்தமையாற்கடைமுரண். |