| றேற்றெதுகை மோனையுடன்வரிற்சிறப்பெத்தொடையுஞ் சீரிடையீ ரநுவும்வருந் தொடைகள்பல தளைகள் தோற்றின்முதல் வந்ததொடை யாற்றளையாற் பெயராஞ் சுருங்குதா ழிசைதரவிற் றரவடிமூன் றிழிபே யேற்றபா விரண்டேவெண் பாவகவல் வெண்பா விடத்தில் வருங் கலியகவ லிடத்தில்வரும் வஞ்சி.* (3) |
(14) | இறுகுறளின் சிதைவுஞ்செந் துறையிழிபுங் குறட்டா ழிசையாம்வேற்றொலிவரினும்வெண்டுறையொற்றெண்ணா தறையடிநேர் பதினாறு நிரைபதினே ழெழுத்தா யடிநான்கு தொறும்வரிற்கட் டளைக்கலித்து றையே யுறுபொருள்சூத் திரங்குறித்த யாப்பிற்றாய் நாற்சீ ரோரடியும் பலவடியும் வருநூற்பா வகவல் புறநிலைவா யுறைவாழ்த்துச் செவியறி்கைக் கிளைகள் பொருளாய்முன்வெண்பாப்பின் னகவல்வரு மருட்பா. (4) |
(15) | வருதனிச்சொற் கூன்பொருளோ டடிமுன்வரு மதுவே வஞ்சியீற் றினுமாம்வெண் பாவகவ லீற்றாற் சுரிதகமாம் வேறுமடி பாவிசையாற் றளையாற் சூழெழுத்தெண் ணால்வகுத்த வகுப்பாற்கா ரணத்தாற் பெருகியிடுங் காலவழக் காற் பலவாஞ் செய்யுட் பெயரெழுத்து முதலெட்டு வகைவிரிவுங் குவிவும் பரவுவகை யுளிவனப்பு வண்ணவகை மற்றும் பலவுமடங் காதடக்கிப் பகருவர்சான் றோரே. (5) |
ஒழிபியல் முற்றும்.
பொருத்தவியல். |
(16) | பகர்செய்யுள் மங்கலச்சொல் லெழுத்துத் தானம் பாலுண்டி வருணநாட் கதியே யென்றாப் |
*இப்பாட்டு முதல் மூன்றுபாடற்கு உரைசிதைந்தும், ஏனையியலுக்கு உரையில்லாமலும் பிரதிகள் காணப்படுகின்றன. |