|
பாதாதி
கேசம், கேசாதி பாதம், அங்கமாலை
|
|
|
43.
|
கடிதலில்
லாக்கலி வெண்பாப் பகரும் அவயவங்கள்
முடிவது கேசமக் கேச முதலடி ஈறும்வந்தாற்
படிதிகழ் பாதாதி கேசமுங் கேசாதி பாதமுமாம்
1மடிதலில் வெண்பா விருந்தம் பலவங்க மாலையென்னே. |
(உரை
I). எ - ன். கேசாதி பாதமும் பாதாதி கேசமும் [அவயவங்கள்
வெண்பா மரபும்]? உணர்த்......................று.
(இ - ள்).
கலிவெண்பாவினாற் பாதமே தொடங்கிக் கேசாந்தமாய்வரிற்
பாதாதி கேசமாம்; கேசமே தொடங்கிப் பாதாந்தமாய்வரிற் கேசாதி பாதமாம்;
வெண்பாவானும் விருத்தங்களானும் வருவது அங்கமாலையாம் எ - று.
(உரை II).
எ - து....................பாதாசிகேசப் பிரபந்தமென்றும்
கேசாதிபாதப் பிரபந்தமென்றும் சொல்லப்படும். வெண்பாவினாலே நூறும்
ஐம்பதுமாக உறுப்புக்களைச் சிறப்பித்துப் பாடுவது அங்கமாலையென்று
வழங்கப்படும் எ - று.
(கு - ரை) தெய்வங்களுக்குப்
பாதாதி கேசமும் ஏனையவர்களுக்குக்
கேசாதி பாதமும் கூறுதல் மரபென்பர்.
(பி - ம்).
1 முடிதலில் வெண்பாவீ ரைம்ப தவையங்க (18)
|
பாதாதிகேசம்
முதலியவற்றுக்கு உறுப்புக்கள்
|
|
|
44. |
அகங்கா
லுகிர்வீரன் மீகால் 1பரடு கணைமுழந்தாள்
2மிகுங்கா னிதம்பமு முந்தியுதர மரை முலையும்
நகஞ்சார் விரலங்கை முன்கைதோள் கண்டம்
முகம்நகைவாய்
நகுங்கா திதழ்மூக்குக் கண்புரு வம்நெற்றி தாழ்குழலே. |
(உரை I) எ - ன், ஓதிய பாதாதி கேசத்துக்கும்
கேசாதி பாதத்துக்கும்
உறுப்புக்கள் இவையென்பது உணர்த்.........று.
உள்ளங்கால், உகிர், விரல், புறங்கால், பரடு, கணைக்கால்,
முழந்தாள்,
குறங்கு, அல்குல், கொப்பூழ், வயிறு, அரை, உயர்முலை, உகிர், விரல்,
உள்ளங்கை, முன்கை, தோள், கண்டம், முகம், முறுவல், வாய், காது, இதழ்,
மூக்கு, கண், புருவம், நெற்றி, குழல் என்னும் முப்பத்திரண்டு (?) உறுப்பும்
பாடற்கு இசைந்தனவே எ - று.
|