| |
கோவை,
நாழிகைக் கவி
|
| |
|
| 54. |
பொருளதி
காரத் 1திறத்தைப் புகன்று கலித்துறைகள்
வருவது நானூறு கோவையென் 2றாகுமவ் வானவர்க்கும்
அரசர் தமக்கு மறிய உரைத்த 3கடிகைகளை
உரைசெய்யுண் முப்பத் திரண்டுவெண் பாவென ஓதுவரே. |
(உரை I). எ - ன், கோவையும் நாழிகைக் கவியும்
உணர்த்........று.
(இ - ள்),
அகப்பொருளையுடைய நானூறு கலித்துறை [யாக்குவன
விதத்தால் வளப்படுத்த] கோவையாகும்; அவை அரசர் கோவை,
பாண்கோவை போல்வன. அரசர்க்கும் வானோர்க்கும் உரைக்கும்
கடிகைகளை முப்பதிரண்டு வெண்பாவினால் உரைப்பது நாழிகைச்
செய்யுளாம் எ - று.
(உரை II).
எ - து, பொருளதிகாரத்துட் பிரமம், பிராஜா பத்தியம்,
ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்று
சொல்லப்பட்ட எட்டுவகை மணத்தினுள் காந்திருவ மணத்தில் நானூறு
கலித்துறை பாடுவது கோவையென்று வழங்கப்படும் ; வெண்பா
முப்பத்திரண்டு பாடுவது கைக்கிளை யென்று வழங்கப்படும் எ - று.
(கு - ரை).
அரசர் கோவை, களவியற்காரிகையுரையில்
அரையர்கோவை என்னும் ஒரு நூற் பெயர் காணப்படுகின்றது.
நாழிகைச்
செய்யுள், நாழிகைக்கவி, நாழிகைவெண்பா, கடிகை வெண்பா என்பன ஒரு
பிரபந்தத்தையே குறிப்பனவாகும்.(29)
(பி - ம்.)
1 தறத்தை 2 றாகுவ 3 படிகைக்கிளை
| |
மருட்பாப்
பிரபந்தம்
|
| |
|
| 55. |
புறநிலை
வாயுறை வாழ்த்துப் 1புவியில் ஒருவன்செவி
யறிவே யுறுத்த லகப்புறக் கைக்கிளை ஆனவிந்த
நெறியிற் பொருள்களை யன்றி மருட்பா நிகழ்த்தலினால்
அறியவிந் நாற்செய்யு ளல்லாத பாவினும் ஆமென்பரே.
|
(உரை
I). எ - ன், மருட்பாவுக்குரிய பொருள் ஆமாறுணர்த்..............று.
|