பக்கம் எண் :
 
187

யளவிய ழற்கலி மழைபொழி யச்செயு மடறிகழ் புயல்வீரா
விளையம டக்கொடி யிடரொழி யப்புனை மலரித ளருளாயே.'

அதிகிருதி.

"காவி யோவிட மோமது கரமோ

கணணிணை யவனிமே லரியாய் கழறே."

*விக்கிருதி.

"உடைய தானவ ருடைய வென்றவ

ருடைய தாணம சரண மாகுமே."

சங்கிருதி.

"அங்குலிய மொன்றுபுன லாழ்தரு கிணற்றில்விழ

வநதமுனி தேடுமினெனாப்

புங்கமொடு புங்கமுற வெய்தவ னெடுத்தமை

புகன்றருகு நின்றவரைநீ

ரிங்கித னிலைத்தொகைகள் யாவுமுரு வப்பகழி

யேவுமினெ னாமுன்விசயன்

றுங்கவில் வளைத்தொரு கணத்தினில் வடத்திலை

துளைத்தனனி லக்கிறொடையால்."

+அபிகிருதி.


* விக்கிருதி சங்கிருதிகளுக்கு உதாரணமாக ஒரோரடியே காட்டினர். பின் வருவனவற்றால் முழுச்செய்யுள் வருமாறுணர்க:

'வன்போர்புரி வெங்கணை யங்கர்பிரான் மறனாலுயர் பேரற னார்குமரன்
றன்போலவி ளங்கின னாதலினென் றனுவுங்குனி யாதுச ரங்கள்செலா
வன்போடிய துள்ளமெ னக்கினிமே லவனோடமர் செய்தலு மிங்கரிதால்
வென்போகுவ னென்றலு மேயிறைவன் விசையோடிர தத்தினை மீளவிடா'

(வி-பா-க-ப-17-ஆம் போர், 204.)

"அண்டர் குலபதி யாம்விடை வாகன

னம்பொ னடிமலர் நாறிடு சேகர

னெண்டி சையுமனு நீதிசெய் கோலின

னெங்கு மொருகுடை யாலிடு நீழலன்

மண்டு கிரணசி காமணி மௌலியன்

வண்டு மதுநுகர் தாதகி மாலையன்

மிண்டு முதுபுலி யேறுப தாகையன்

வென்றி வளவனை யார்நிக ராவரே."

(வி-பா-க-ப-17-ஆம் போர், 68.)

+ "ஆசிரியர் உதாரணமாகக் காட்டிய 'தொழுதவ முனிவரு மருளுறு மலருறை' என்னுஞ் செய்யுள் காலாந்தரத்தில் பாடாந்தரம் தாறுமாறாகி