பக்கம் எண் :
 
2

முதலாவது

எழுத்ததிகாரம் 1

ச ந் தி ப் ப ட ல ம் 2

கட்டளைக் கலித்துறை

1. உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, மூவினமெய்

அறிந்த வெழுத்தம்முன் பன்னிரண் டாவிக ளான; கம் முன்
பிறந்த பதினெட்டு மெய் ; நடு வாய்தம்; பெயர்த்திடையா
முறிந்தன யம்முத லாறும் ; ஙஞண நமனவென்று
செறிந்தன மெல்லினம் ; செப்பாத வல்லினம்; தேமொழியே!

(இதன் பொருள்) அறிந்த எழுத்து அம்முன் பன்னிரண்டு ஆவிகளான - அறிந்து சொல்லப்படாநின்றவெழுத்துக்களுக்குள்ளே அகரமுதல் ஒளகாரமீறாகச் சொல்லப்பட்ட பன்னிரண்டெழுத்தும் உயிரெழுத்தென்னும் பெயரவாம்; 3கம்முன் பிறந்த பதினெட்டு மெய் - ககரவொற்று முதல் னகரவொற்றீறாகச் சொல்லப்பட்ட பதினெட்டெழுத்தும் மெய்யெழுத்தென்னும் பெயரவாம்; நடு ஆய்தம் - உயிரெழுத்திற்கும் மெய்யெழுத்திற்கும் நடுவாந் தன்மையாயிருக்கிற அஃகேனம்


1. இஃது எழுத்திலக்கணத்தைக் கூறும் அதிகாரம் என்றாம்.

2. இது சந்தியைக் கூறும் படலம் என்றாம். சந்தி - புணர்ச்சி. ஈண்டுப் படலம் என்றது அதிகாரத்திற்கு உட்பட்ட சிறு பிரிவை. இப்படலத்தில் எழுத்திலக்கணமுங் கூறப்படுகின்றதாயினும், மிகுதியாகக் கூறப்படுவது சந்தியிலக்கணமாகலின், இது சந்திப்படலம் எனப்பட்டது.

3. மெய்யெனினும், உடம்பு எனினும், உறுப்பு எனினும், ஒற்று எனினும் ஒக்கும். மெய்யெழுத்துக்களின் மேலேறி நின்ற அகரம் எழுத்துச் சாரியை. அது மெய்யெழுத்துக்களை உச்சரித்தற் பொருட்டு வந்தது.