பக்கம் எண் :
 
72

வைத்து முடிக்கின் அல்லது பெயர்ச்சொல்லெல்லாம் முடிக்க அடங்கா (எ-று.)

1 வரலாறு:-

பூ + தம் = பூதம்,
தா + மம் = தாமம்,
நீ + தி = நீதி,
பா + கன் = பாகன்,
இ + வம் = ஏவம், இதில் இகரம் குணமானது.

புச + அனம் = போசனம், இது உகரம் குணமானது.
நி + அனம் = நயனம், இது இகாராந்தம் அய்யானது.
நி + அகன் = நாயகன், இது ஆயானது.
சா + அணம் = சாணம்,

விதி + தன் = வேந்தன், இது ஈற்றில் நகரவொற்றாதேசமாய்,
இகரம் குணமானது.
கிரு + அன் = கருடன், இது இருவினுக்கு அர் ஆனது.
துட + அக்கு = துடக்கு,
சர் + இ = சரி,

மத + உ = மாது, இதில் முதலுயிர் நீண்டது.
வா + சம் = வாசம்,
வா + மன் = வாமன்,
சா + மம் = சாமம்,

நட + ஐ = நடை,
நட + அகம் = நாடகம்,
நி + சர் = நேசர், இது குணமானது.
பா + திரம் = பாத்திரம்,

கட + ஆ = கடா,
வா + ஆயு = வாயு,
பட + அல் = படல்,
புட + இல் = புட்டில்,

பூ + மி = பூமி,
வலி + ஆன் = வல்லான்,
கட + கம் = கடகம்,
மத + அன் = மதன்,

கத + தவம் = கதவம், இது கடை குறைந்தது.


1 'இவ்வுதாரணங்கள் எல்லாருக்கும் உடன் பாடன்று,' என்பது பழைய குறிப்பு.