பாங்கற் குணர்த்தலும் பழியெனக் கூறலும் தேங்கமழ் தாரோன் தெரியான் செப்பலுங் கிளைஞன் கழறலுங் கேடெனக் கூறலும் இளையவன் வடிவு மிடனு மீதலும் அண்ணல் கவற்சிக் கவள்வடிவு மிடனுந் திண்ணிதிற் செப்பலுஞ் சென்றவன் காண்டலும் வெறிகமழ் கோதை மிகுநலம் புணர்தலும் அறிவு நிறையு மண்ணலை யெய்தலும் வேறிடங் காட்டலு மிலங்கிழை யுணர்தலும் ஊறன்றா முடிவில்தன் பாங்கற் கூட்டமுந் தையல் தளர்ச்சியை நோக்கித் தோழி ஐயுறு நிலைமை யறிய வுரைத்தலும் மனைவி போல வல்லவை மொழிதலும் விழுப்பம் பேசலும் வேண்டா வென்றலும் பழித்தக வுணர்த்தலும் பார்த்துற வுரைத்தலும் பொருந்தா வென்றலும் பொய்யுரை புரிதலும் வருந்து மென்றலும் வடிவிது வென்றலும் நின்குறை நீயே சென்றுரை யென்றலும் சீர்மலர்க் கோதைக்குச் செவ்வியன் றென்றலும் நீர்மையன் றென்றலு நீங்குமி னென்றலும் மூரன் முறுவலோடு முகமலர்ந் துரைத்தலும் இரங்கி மொழிதலு மேத்தி மொழிதலும் கலங்கி மொழிதலுங் கழறி மொழிதலும் வள்ளல் தளர்ச்சியு மடலேற்று மொழிதலும் உள்ளங் குளிர்ப்பித் தொண்தழை யென்றலும் நெஞ்சத் தடங்கிய நின்றுகுறை யேற்றலும் இன்சொ லிரக்கமும் வன்சொலின் மயக்கமும் புகழ்தலு மயங்கி யுரைத்தலும் கயற்கண் ணேழையைக் கவற்சி தீர்த்தலும் பகற்குறி நேர்தலு மக்குறி யுரைத்தலும் பகலிடங் காண்டலுஞ் சொற்பல வுரைத்தலும் இற்செறி வுரைத்தலும் வரைவு கடாவலும் இரவர விசைத்தலும் வரவு விலக்கலும் மற்றவள் தளர்ச்சியு மிரவுக்குறி நேர்தலும் எய்துகுறி வினவலு மேந்திழை மகிழ்வுடன் குறியு ரைத்தலு மதுகேட் டுணர்த்தலும் மெய்க்குறி யுரைத்தலு மிகுதியில் கொண்டலும்
|