எழுத்ததிகாரம் | 113 | முத்துவீரியம் |
(வ-று.) அங்குக்
கொண்டான்.
பிறவுமன்ன.
(வி-ரை.)
‘அந்நான் மொழியும்
தந்நிலை திரியா’ (குற்றிய - 24)
என்பது தொல்காப்பியம்.
(253)
உண்டு
413. உண்டென் பெயரே
யுண்மை செப்பின்
இயல்பா தலுமீ றழிதலும் ணகாரம்
ளகார மாதலு முரியன வாகும்.
(இ-ள்.) உண்டென்னும்
பெயருண்மைப் பொருளைக் கூறின் இயல்பாதலு
மீறுகெடுதலும், ணகரமெய் ளகரமெய்யாகத் திரிதலுமுரியவாம்.
(வ-று.) உண்டுபொருள்,
உள்பொருள் எனவரும். (254)
இருதிசை புணர்தல்
414. இருதிசை புணரி னேயிடை
வருமே.1
(இ-ள்.) இரண்டுபெருந்
திசைகளுந் தம்மிற் புணரின் ஏகாரச் சாரியை இடையில்
வருமெனவறிக.
(வ-று.) வடக்கே தெற்கு;
கிழக்கே மேற்கு. (255)
திசைப் பெயர்முன்
திசையும் பிறவும்
415. திசையொடு திசையும்
பிறவுஞ் சேரின்
நிலையீற் றுயிர்மெய்
கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலு
மாம்பிற.2
(இ-ள்.) திசையொடு
திசையும் பிறபெயரும் புணரின் நிலைமொழியிறுதி
யுயிர்மெய்யுங் ககரவொற்றுங் கெடுதலும், றகரமெய்
னகரமெய் யாகவேனும் லகரமெய்
யாகவேனுந் திரிதலுமாம்.
(வ-று.) வடகிழக்கு,
தென்மலை, மேல்பால். (256)
1. தொல் - எழுத் - குற்றிய
- 26.
2. நன் - எழுத் - உயிரீற் -
36.
|