பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்118முத்துவீரியம்

மூன்றனொற்று

433. மூன்ற னொற்றே வகரம் வரும்வழி
     தோன்றிய வகரத் துருவா கும்மே.1

(இ-ள்.) மூன்றென்னும் எண்ணின்கணின்ற னகரமெய் வகரம் வருங்கால் வந்த
வகரவடிவா மென்க.

(வ-று.) மூவட்டில். (274)

நான்கன்மெய்

434. நான்கன் மெய்யே லகார மாகும்.

(இ-ள்.) நான்கென்னும் எண்ணின்கண் நின்ற னகர மெய் லகரமெய்யாகத் திரியும்.

(வ-று.) நால்வட்டில். (275)

ஐந்தனொற்று

435. ஐந்த னொற்றே யடியொடு கெடுமே.

(இ-ள்.) ஐந்தென்னும் எண்ணின்கண் நின்ற நகரமெய் முன்வடிவு கெடும்.

(வ-று.) ஐவட்டில். (276)

ஒன்று, இரண்டின்முன் உயிர்

436. ஒன்று மிரண்டு முயிர்வரு காலை
     உகரங் கெடுத லாவயி னான.

(இ-ள்.) ஒரு இருவென முடிந்துநின்ற இரண்டெண்களின் முன் உயிர்வரி னுகரங்கெடும்.

(வ-று.) ஓரகல், ஈரகல் எனவரும். (277)

மூன்று நான்கு ஐந்து

437. மூன்று நான்கு மைந்துந் தோன்றிய
     வகரத் துருவாய் வழங்கு மென்ப.

(இ-ள்.) மூன்றென்னும் எண்ணும், நான்கென்னும் எண்ணும், ஐந்தென்னும் எண்ணும்
முற்றோன்றி நின்ற வகரம்

1. தொல் - எழுத் - குற்றிய 45.