பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்18முத்துவீரியம்

க, ங

47. அடிநா வடியண மழுத்தக் கஙவரும்.

(இ-ள்.) ககர ஙகரங்கள் அடிநாவடி மேல்வாயை அழுத்தப் பிறக்கும். (47)

ச, ஞ

48. இடைநா விடையண மிறுக்கச் சஞவெழும்.

(இ-ள்) சகரஞகரங்கள் நடுநா நடு மேல் வாயைப் பொருந்தப் பிறக்கும். (48)

ட, ண

49. நுனிநா நுனியண நோக்க டணவரும்.

(இ-ள்.) டகர ணகரங்கள் நுனிநா நுனிமேல் வாயைப் பொருந்தப் பிறக்கும். (49)

த, ந

50. 1அண்பல் லடிநா முடியுறத் தநவரும்.

(இ-ள்.) தகர நகரங்கள் மேல்வாய்ப் பல்லடியை நாநுனி பொருந்தப் பிறக்கும். (50)

ப, ம

51. இரண்டித ழுறப்பம வெழுமென மொழிப.

(இ-ள்.) பகர மகரங்கள் மேலுதடும் கீழுதடும் பொருந்தப் பிறக்கும். (51)

52. அடிநா வடியண முறவரும் யகாரம்.

(இ-ள்.) யகரம் அடிநாவடி யணத்தைப் பொருந்தப் பிறக்கும். (52)

ர, ழ

53. 2அண்ண நுனிநா வருட ரழவரும்.

1. நன் - எழுத் - 25.

2. ” ” 28.